இவரை மாதிரி ஒரு பிளேயர் வேணும்னு எல்லா கேப்டனும் ஆசைப்படுவாங்க. அவ்ளோ டேலன்ட் இவரு – ரெய்னா ஓபன்டாக்

Raina

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி, இதுவரை தான் பங்குபெற்ற 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையில் csk.tv என்ற இணையதள பக்கத்திற்கு பேட்டி அளித்த சுரேஷ் ரெய்னா சென்னை அணியின் ஆல்ரவுண்டராக திகழும் ரவீந்திர ஜடேஜாவைப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். அப்பேட்டியில் அவர் ஜடேஜாவைப் பற்றி கூறும்போது

CSK

ரவீந்திர ஜடேஜா டெஸ்ட், ஒன் டே, t20 என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்க தகுதியானவர். ஏனெனில் அவர் பேட்டிங், பௌலிங், பீல்டிங் என அனைத்திலுமே மிகச்சிறப்பாக செயல்படக் கூடிய வீரர். இந்த சீசனின் துவக்கத்திலிருந்தே ஜடேஜா இந்த மூன்று விஷயத்திலும் அபாரமாக செயல்பட்டு வருகிறார் என்று கூறினார்.

மேலும் பேசிய ரெய்னா ஜடேஜாவிற்கு நான் கேப்டனாக செயல்பட்டபோது அவரைப் பற்றி நிறைய விஷயங்களை தெரிந்துகொண்டேன். அவர் எப்பொழுதும் அதிகமாக உழைக்க கூடியவர். இன்னும் சொல்லப்போனால் அவரை உலகின் நம்பர் ஒன் வீரர் என்றும் சொல்லலாம். ஒரு போட்டியில் ஒரு வீரர் பிடிக்கும் கேட்சோ அல்லது அவர்கள் செய்யும் ரன் அவுட்டோ அந்த போட்டியையே மாற்றிவிடும்.

அந்த வகையில் பீல்டிங் செய்வதில் ஜடேஜா மிகச் சிறந்தவர். எனவே எந்த அணி கேப்டன்களும் ஜடேஜாவை தங்களது அணியில் வைத்துக்கொள்ளவே விரும்புவர் என்று கூறினார். சுரேஷ் ரெய்னா 2008ஆம் ஆண்டே சென்னை அணிக்காக விளையாட ஆரம்பித்து விட்டார். ஆனால் ரவீந்திர ஜடேஜாவை 2011 ஆம் ஆண்டு தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார்.

- Advertisement -

பின்பு 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, ஐபிஎல் தொடர்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அந்த இரண்டு வருடமும் ஜடேஜாவும், சுரேஷ் ரெய்னாவும் இணைந்து குஜராத் லயன்ஸ் அணியில் விளையாடினார்கள். அப்போது குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தது சுரேஷ்ரெய்னா என்பது குறிப்பிடத்தக்கது.