ஐ.பி.எல் தொடரை விட இதுவே எனக்கு முக்கியம். உங்களுக்கும் சேர்த்து தான் சொல்றேன் – ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய ரெய்னா

Raina
- Advertisement -

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி துவங்க இருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கூட கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாத காரணத்தினால் ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதன் பின்பு இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.

Ipl cup

- Advertisement -

இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற வாய்ப்பே இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து ஐபிஎல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் வீரர்கள் தற்போது தங்களது ஓய்வு நேரத்தை வீட்டிலேயே கழித்து வருகின்றனர். மேலும் இதற்கடுத்து சர்வதேசப் போட்டிகள் எப்போது தொடங்கும் என்பது சந்தேகமாக இருக்கும் நிலையில் வீரர்கள் தங்களது ஓய்வு நேரத்தை ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகள் நடத்த படாமல் போனது குறித்து சென்னை அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னாவும் தனது கருத்தினை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்தார். இது குறித்து அவர் பேசும்போது : தனக்கு தனது குடும்பம் தற்போது முக்கியம் என்றும் இது அனைவருக்கும் சமம் தான் என்றும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து சுரேஷ் ரெய்னா விரிவாக பேசுகையில் :

Raina

எல்லோரும் இப்போது மிக விவேகமானவர்களாக இருக்க வேண்டும். தற்போது இருக்கும் சூழலில் கிரிக்கெட் போட்டியை விட இப்போது இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாம் போராடியே ஆகவேண்டும். ரோட்டில் உள்ள எந்த இடத்துக்கும் செல்ல கூடாது நிஜமாகவே உங்கள் முடிவுகளில் நீங்கள் புத்திசாலியாக இருக்க வேண்டும். மிக முக்கியமான வேலைகளுக்கு மட்டுமே அவசரமான வேலைகளுக்கு மட்டுமே வெளியில் செல்லுங்கள்.

- Advertisement -

மற்றபடி வெளியில் செல்ல வேண்டாம் இப்போது கிரிக்கெட் குறித்தும், ஐபிஎல் குறித்தும் நினைத்து பார்ப்பதைவிட அவரின் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும். அதுவே தற்போது நம் அனைவரின் பொறுப்பாகும். நீங்கள் எவ்வளவு அதிகமாக வீட்டில் தங்க முடியுமா அவ்வளவு அதிகம் வீட்டிலேயே இருங்கள் என்று கேட்டுக்கொண்டார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டம் நிறுத்தப்பட்டது குறித்து எங்களுக்கு தெரிவிக்கப்பட்ட போது :எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்.

Priyanka raina 1

எனவே தற்போது அவரவர் அவர்களது வீட்டில் உள்ளோம் உண்மையில் நமக்கு குடும்பம் நண்பர்கள் என பலர் உள்ளனர் அவர்களை நாம் நிச்சயம் கவனிக்க வேண்டும். எனக்கு விளையாட்டை விட எனது குடும்பம் முக்கியமானது. இது எனக்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இது ஒரே ஒரே மாதிரிதான் என்று சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சியுடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement