ஜடேஜா செய்த தவறால் பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறிய சுரேஷ் ரெய்னா – இதை கவனிச்சீங்களா ?

Runout
- Advertisement -

டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் இந்த ஆண்டு இணைந்துள்ள சுரேஷ் ரெய்னா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு அதிரடி ஆட்டத்தின் மூலம் விருந்தளித்தார். குறிப்பாக துவக்க வீரர்கள் இருவரும் 7 ரன்களுக்கு ஆட்டம் இது வெளியேறுகையில் அணியை சரியான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் மொயின் அலி மற்றும் ரெய்னா ஆகியோர் இருந்தனர் .

raina

இதில் மூன்றாவது வீரராக மொயின் அலி 4-வது வீரராக சுரேஷ் ரெய்னா ஆகியோரும் களமிறங்கினர். இவர்கள் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேகரித்தனர். மிடில் ஓவர்களில் பொறுமையாக விளையாடினால் வேலைக்காகாது என்று இருவரும் அதிரடியை கையிலெடுத்து டெல்லி அணியின் ஸ்பின் பவுலர்களை பிரட்டி எடுத்தனர். ஒரு கட்டத்தில் மொயின் அலி ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

ரெய்னா மட்டும் ஒருபுறம் தனக்கென இருக்கும் அதே பாணியில் அதிரடியாக விளையாடி வந்தார். அவருடன் ராயுடு இணைய ஸ்கோர் மளமளவென எகிறியது. ரெய்னாவும் 32 பந்துகளில் அரைசதத்தை கடந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் ஓராண்டிற்கு மேலாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்து தான் மீண்டு வந்த முதல் போட்டியிலேயே அதிரடியான அரை சதம் விளாசிய சுரேஷ்ரெய்னா இறுதிவரை நின்று பெரிய ரன் குவிப்பை வழங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் ரவீந்திர ஜடேஜா அவரை தேவையில்லாமல் ரன் அவுட் செய்து வெளியேற்றியது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

runout 1

ஏனெனில் நேற்றைய போட்டியில் மிக மிகுந்த அதிரடியாக விளையாடிய ரெய்னா இறுதிவரை நின்று இருந்தால் மிகப் பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றிருப்பார். அந்த வேளையில் ஜடேஜா ஒரு பந்தினை தட்டிவிட்டு தேவையில்லாமல் இரண்டாவது ரன்னுக்கு அழைத்தது மட்டுமின்றி பந்துவீச்சாளர் மீது மோதி மீண்டும் அவரது கிரீசுக்கு திரும்பினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ரெய்னா இரண்டாவது ரன்னிற்கு மைதானத்தில் பாதி தூரம் ஓடி வந்து மீண்டும் கிரீஸுக்கு திரும்ப முடியாமல் பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறினார்.

raina

ஓராண்டிற்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்தில் திரும்பி அரைசதம் அடித்த ரெய்னா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வேளையில் ஜடேஜாவின் தவறான அழைப்பு காரணமாக ஆட்டம் இருந்து வெளியேறியது ரசிகர்களிடையே சற்று வருத்தத்தை அளிக்கும் இடமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement