- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2026 டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் குவிக்கப்போகும் இந்திய வீரர் யார்? – சுரேஷ் ரெய்னா கணிப்பு

2026-ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 7-ம் தேதி துவங்கி மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அதிக ரன்களை அடிக்கப்போகும் இந்திய வீரர் யார்? : சுரேஷ் ரெய்னா

ஏற்கனவே இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு அட்டவணையும் தயார் நிலையில் உள்ளது. இதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இவ்வேளையில் இந்த தொடரில் அதிக ரன்களை குவிக்கப்போகும் வீரர் யார்? அதிக விக்கெட் எடுக்கப்போகும் பவுலர் யார்? என்பது குறித்த பல்வேறு கணிப்புகளை முன்னாள் வீரர்கள் பலரும் வழங்கி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணி சார்பாக இந்த டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடிக்கப்போகும் பேட்ஸ்மேன்கள் யார்? என்ற கணிப்பில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், ராபின் உத்தப்பா போன்றோர் கலந்து கொண்டு தங்களது கணிப்புகளை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த வகையில் இந்த 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அதிக ரன்களை குவிக்கும் வீரராக சூரியகுமார் யாதவ் திகழ்வார் என சுரேஷ் ரெய்னா தனது கணிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.

அதேபோன்று அவரது கருத்தை ஆதரித்த இர்ஃபான் பதானும் சூரியகுமார் யாதவ் தான் இந்த தொடரில் அதிக ரன்கள் அடிப்பார் என்று எனக்கும் தோன்றுவதாக குறிப்பிட்டார். ஏற்கனவே டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியை ஏற்றதிலிருந்து மோசமான பேட்டிங் காரணமாக சரிவை சந்தித்த சூரியகுமார் யாதவ் ஒரு கடந்த ஆண்டு நடைபெற்ற 22 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் தவித்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : அதுக்குள்ள 10 வருஷம் ஆயிடுச்சி.. ஆனா இதுதான் என்னோட துவக்கம் – ஹார்டிக் பாண்டியா நெகிழ்ச்சி

ஆனால் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியை தவிர்த்து அடுத்த இரண்டு போட்டியிலும் அரைசதம் அடித்து தனது பார்மை மீட்டெடுத்துள்ளார். எனவே அவர் நிச்சயம் டி20 உலக கோப்பை தொடரில் கலக்குவார் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -