இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்ற முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது.
டெஸ்ட் தொடரை கைப்பற்றப்போவது யார்? : சுரேஷ் ரெய்னா கணிப்பு
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியானது இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக மாறியுள்ளது.
ஏனெனில் நடைபெற இருக்கும் இந்த நான்காவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரானது இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமநிலை அடையும். இதன்காரணமாக இந்திய வீரர்கள் தற்போது தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளையில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இங்கிலாந்து அணியும் தீவிரம் காட்டுகிறது.
இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த நான்காவது போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இந்த தொடரில் இரண்டு ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த பல்வேறு கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா இந்த தொடரை இந்திய அணி மூன்றுக்கு இரண்டு (3-2) என்ற கணக்கில் கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணி இந்த தொடரினை மூன்றுக்கு இரண்டு (3-2) என்ற கணக்கில் கைப்பற்றும் என்று நான் நம்புகிறேன். அதனை செய்ய இந்திய அணியால் முடியும்.
இதையும் படிங்க : ரிஷப் பண்டுக்கு இந்த லைசன்ஸ் மட்டும் கெடச்சா.. இங்கி அணியை பொளந்துடுவாரு – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து
சுப்மன் கில் ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். அதுமட்டும் இன்றி கே.எல் ராகுல், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் போன்ற வீரர்களும் பேட்டிங்கில் அசத்தலாக செயல்பட்டு வருகின்றனர். அதேபோன்று பந்துவீச்சு துறையிலும் பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். இதனால் இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரினை கைப்பற்றும் என நம்புவதாக சுரேஷ் ரெய்னா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



