இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை பயமற்ற அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் அவர் இந்த தொடரிலும் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இதுவரை 6 இன்னிங்ஸ்களில் 70 ரன்கள் சராசரியுடன் 425 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது இந்திய வீரராக இருக்கிறார்.
ரிஷப் பண்ட்க்கு இந்த லைசன்ஸ் குடுத்தா பட்டையை கிளப்புவாரு : சஞ்சய் மஞ்சரேக்கர்
மேலும் எதிர்வரும் இரண்டு போட்டிகளிலும் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும், அவர் விளையாடினால் அது இந்திய அணிக்கு கூடுதல் பலம் என்றும் பலரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் மூன்றாவது போட்டியின் போது கை விரலில் காயமடைந்த அவர் நான்காவது போட்டியில் பங்கேற்பாரா? மாட்டாரா? என்பது தற்போது வரை சந்தேகமாகவே இருந்து வருகிறது.
ஆனாலும் நான்காவது போட்டியில் அவர் விளையாடுவார் என்றே தெரிகிறது. அப்படி நான்காவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடும் பட்சத்தில் பல்வேறு சாதனைகளை இந்த தொடரில் நிகழ்த்தவும் காத்திருக்கிறார். இந்நிலையில் அவரது இயல்பான அதிரடியான ஆட்டத்தினை விளையாட வைத்து அவருக்கு ஒரு ப்ரீ லைசன்ஸ் கொடுத்தால் இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்னும் அதிரையான ரன் குவிப்பை அவர் வழங்குவார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
குறித்து பேசிய அவர் கூறுகையில் : ரிஷப் பண்ட் தற்போது எவ்வாறு விளையாடுகிறாரோ அந்த வழியிலேயே அவரை விட்டுவிட வேண்டும். சூழ்நிலை எதுவாக இருந்தாலும் தனது இயல்பான அதிரடியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துகிறார். அவருக்கு அவரது ஆட்டத்தை விளையாட நிர்வாகம் லைசென்ஸ் கொடுக்க வேண்டும் அவர் அதற்கு தகுதியானவர். அப்படி ஒரு உறுதி நிர்வாகத்திடம் இருந்து அவருக்கு கிடைத்தால் நிச்சயம் இன்னும் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் அபாயகரமாக மாறும்.
மேலும் அவரது இயல்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய அணியின் ரன் குவிப்பும் இன்னும் வேகம் அடையும். தற்போதைய இந்திய அணியில் ஐந்தாம் இடத்தில் ரிஷப் பண்ட் மிக பலம் வாய்ந்த பெரிய வீரராக விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு அவர் தொடர்ந்து பயத்தை கொடுக்கும் வீரராகவும் வலம் வருகிறார் என சஞ்சய் மஞ்சரேக்கர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வங்கதேசம் அதுல சூழ்ச்சி பண்ணி பாகிஸ்தானை தோற்கடித்ததை ஏத்துக்க முடியல.. கோச் ஹெசன் அதிருப்தி
மேலும் ஜெய்ஸ்வால் குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஜெய்ஸ்வால் இந்திய அணிக்கு அதிரடியான துவக்கத்தை அளிக்கும் வீரராக இருக்கிறார். ஆனாலும் அவர் ஆட்டமிழக்கும் விதம் குறித்து அவர் யோசிக்க வேண்டும். ஏனெனில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் எளிதாக விக்கெட்டை எதிரணிக்கு வழங்குவது போன்று இருக்கிறது. எனவே அதில் மட்டும் அவர் கவனம் செலுத்த வேண்டும் என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.



