ரெய்னாவை தோனியால் முந்தவே முடியவில்லை ..! எந்த விஷயத்தில் தெரியுமா..?

suresh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தோனி என்று பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஆனால் ஐபிஎல் போட்டியில் அவருடன் விளையாடிய ரைனவின் சாதனையை தோணியால் இந்த ஐபிஎல் தொடரில் முறியடிக்க முடியவில்லை என்பது தான் அனைவரையும் ரெய்னா மீது பொறாமைபட வைத்துள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்கிய போது ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த பட்டியலில் முதல் இடத்தில இருந்தார் ரெய்னா.
watson
ஆனால் இந்த ஆண்டு நடந்து வந்த ஐபிஎல் போட்டிகளில் ரெய்னா சரியாக விளையாடாததால் அவரது இடத்தை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி ஆக்கரமித்துக் கொண்டார். ஆனால் கடந்த செய்வாய் கிழமை (மே 22) அன்று நடந்த ஹைட்ரபாத்திற்கு எதிரான போட்டியில் 22 ரன்களை குவித்ததன் மூலம் ரெய்னா 4953 ரன்களை பெற்று, அதிக ரன்களை குவித்த பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதனால் முதல் இடத்தில் இருந்த கோலி 4493 ரன்களுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில் ரெய்னா மற்றுமொரு சாதனையை படைக்கவிருந்தார் நேற்று நடந்த இறுதி போட்டியில் ரெய்னா 47 ரன்களை குவித்திருந்தால் ஐபிஎல் வரலாற்றில் 5000 ரன்களை கடக்கும் முதல் வீரர் என்ற சாதனை பட்டியலில் இடம்பிடித்திருந்திப்பார். ஆனால் நேற்று நடந்த இறுதி போட்டியில் 24 பந்துகளில் 32 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
dhoni

- Advertisement -

இருப்பினும் நடந்து முடிந்த 11 ஐபிஎல் தொடர்களில் ரெய்னா இதுவரை 176 போட்டிகளில் விளையாடி 4525 ரன்களை எடுத்துள்ளார். ஆனால் சென்னை அணியின் கேப்டன் தோனி 175 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார், இதன் மூலம் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் பட்டியலிலும், அதிக ரன் எடுத்த ரன் பட்டியலிலும் தோனிக்கு முன்னால் உள்ளார் ரெய்னா.

Advertisement