- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2026 டி20 வேர்ல்டு கப்ல எந்த 2 பேர் துவக்க வீரர்களாக விளையாடனும்.. ரெய்னா தேர்வு செய்த 2 ஓப்பனர்ஸ் – யார் தெரியுமா?

கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரினை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது கைப்பற்றி அசத்தியது. அதன்மூலம் கடந்த 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு 2024 டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்று அசத்தியிருந்தது. அந்த வகையில் தற்போது நடப்பு சாம்பியனாக இருக்கும் இந்திய அணியானது 2026-ல் சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கிறது.

டி20 உலககோப்பை தொடருக்கான துவக்க வீரர்கள் யார்? : சுரேஷ் ரெய்னா கணிப்பு

இந்த டி20 உலக கோப்பை தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியே பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரிலும் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாகவும் இருந்து வருகிறது. அதன் முன்னோட்டமாக தற்போது இந்திய அணியானது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துவக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ள வேளையில் எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக யார் இருக்க வேண்டும்? என இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தனது கணிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்திய அணியில் தற்போது ஏகப்பட்ட வீரர்கள் துவக்க வீரர்களுக்கான இடத்தில் வரிசை கட்டி காத்திருக்கின்றனர். ஆனாலும் அந்தப் பட்டியலில் நிச்சயம் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இருப்பார். அதேபோன்று துவக்க வீரர்களுக்கான போட்டியில் பிரான்ஷ் ஆர்யா, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், கே.எல் ராகுல், ருதுராஜ் கெய்க்வாட் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

- Advertisement -

இருப்பினும் என்னை பொறுத்தவரை 2026 டி20 உலககோப்பை தொடரில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், பிரியான்ஷ் ஆர்யா, அபிஷேக் ஷர்மா ஆகிய மூவரில் இருவரையே டி20 உலககோப்பை தொடரின் துவக்க வீரர்களாக தேர்வு செய்வேன். இந்த மூன்று வீரர்களில் எந்த இரண்டு வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம் பிடித்தாலும் அதிரடியான துவக்கத்தை கொடுக்க முடியும்.

இதையும் படிங்க : 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பெஸ்ட் பிளேயிங் லெவனை தேர்வுசெய்த – இர்பான் பதான்

அதே வேளையில் சுப்மன் கில் அந்த டி20 உலக கோப்பை அணியின் துணை கேப்டனாக தொடரலாம் என்றும் ரெய்னா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்திய டி20 அணியில் துவக்க வீரர்களுக்கான இடத்தில் பலத்த போட்டி நடைபெற்று வரும் வேளையில் மேலும் சிலர் போட்டிக்கு வரவும் வாய்ப்புண்டு.

- Advertisement -