உலகின் தலைசிறந்த 5 பெஸ்ட் பீல்டர்களை தேர்வு செய்த சுரேஷ் ரெய்னா – விவரம் இதோ

Raina
- Advertisement -

கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 50 ரன்களை குவிப்பது, பவுலிங்கில் 3 விக்கெட்டுகளை எடுப்பதற்கு நிகரான ஒன்று யாதெனில் பீல்டிங் செய்து பத்து ரன்களை சேமிப்பது. அந்த அளவிற்கு பீல்டிங் என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஒரு நல்ல பீல்டர் மூலம் ஏகப்பட்ட ரன்களை தடுக்க முடியும். துவக்கத்தில் சிறப்பான பீல்டர்களை ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக வழங்கி வந்தது.

Raina-1

- Advertisement -

அதன் பின்னர் தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஏகப்பட்ட வீரர்கள் பீல்டிங்கில் அசத்துகின்றனர். மேலும் பிட்னஸ்க்கு இந்திய அணியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் மிகச்சிறந்த பீல்டர் என்று கருதப்படும் சுரேஷ் ரெய்னா தற்போது உலகின் தலைசிறந்த 5 பெஸ்ட் பீல்டர்களை தேர்வு செய்துள்ளார்

ரெய்னாவிடம் 30 யார்டு வட்டத்திற்குள் பீல்டிங் செய்ய சிறந்த ஐந்து பீல்டர்களை தேர்வு செய்யுமாறு இணையதள பேட்டியில் ஹர்ஷா போக்ளே கேள்வி எழுப்பினார். அந்த கேள்வியில் அவருக்கு 10 வீரர்களின் பெயரும் தேர்வுக்காக வழங்கப்பட்டது. ஜான்டி ரோட்ஸ், ரிக்கி பாண்டிங், காலிங் வுட், கிப்ஸ், யுவராஜ் சிங், ஜடேஜா, கோலி, டிவில்லியர்ஸ், மார்டின் கப்தில், மேக்ஸ்வெல் ஆகியோரின் பெயரை ஹர்ஷா போக்ளே குறிப்பிட்டார்.

Raina

அதிலிருந்து 5 வீரர்களை ரெய்னாவை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த ரெய்னா கூறுகையில் : இந்த பத்து பேருமே சிறந்த பீல்டர்கள் தான். அவர்கள் ஆல் டைம் பெஸ்ட் பீல்டர்கள் இந்தப் பத்து பீல்டர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் திறன் கொண்டவர்கள்.

Fielder

இருப்பினும் இந்த கேள்விக்கு நான் பதில் அளிக்க விரும்புவதால் பாயிண்ட் திசையில் ஜான்டி ரோட்ஸ், கவர் திசையில் டிவில்லியர்ஸ், மிட் ஆன் திசையில் யுவராஜ் சிங், மிட் ஆஃப் திசையில் ஜடேஜா மற்றும் மிட்விக்கெட்டில் பாண்டிங் ஆகியோரை சிறந்த பீல்டராக தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement