- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் குல்தீப் – வருண் ஆகியோரில் யார் விளையாட வேண்டும்? ரெய்னா பேட்டி

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்திய கிரிக்கெட் அணி இறுதிக்கட்டமாக தயாராகி வருகிறது. அதற்காக தற்போது நடைபெறும் இங்கிலாந்து ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்றுள்ள இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் கோப்பையை ஆரம்பத்திலேயே வென்றுள்ளது. முன்னதாக இத்தொடரில் இந்திய அணியில் முழுமையான ஸ்பின்னர்கள் வரிசையில் குல்தீப் யாதவ், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

அதில் இத்தொடரில் ஆரம்பத்தில் தேர்வு செய்யப்படாத வருண் சக்கரவர்த்தி சமீபத்திய டி20 தொடர்களில் அபாரமாக பவுலிங் செய்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அது போக 2025 விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் தொடரில் தமிழ்நாடு அணிக்காக 18 விக்கெட்டுகள் எடுத்த அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதனால் கடைசி நேரத்தில் இத்தொடரில் தேர்வான அவருக்கு இரண்டாவது போட்டியில் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

வருண் – குல்தீப்:

அந்த வாய்ப்பில் 1 விக்கெட் எடுத்த வருண் சக்கரவர்த்திக்கு தொடர்ந்து அசத்தினால் சாம்பியன்ஸ் டிராபியில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கேப்டன் ரோஹித் சர்மா ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் வருண் சக்கரவர்த்தியை விட அனுபவம் அதிகம் கொண்ட குல்தீப் யாதவ் தான் பிளேயிங் லெவனில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

அதற்கான காரணம் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ரெய்னா பேசியது பின்வருமாறு. “தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வருண் அதிகமாக பவுலிங் செய்கிறார். மறுபுறம் குல்தீப் யாதவிடம் வெரைட்டி மற்றும் விக்கெட் எடுக்கும் திறன் இருக்கிறது. அனைத்தையும் விட பெரிய தொடர்களில் அவர் முக்கிய நேரங்களில் உயர்ந்து நிற்கக் கூடியவர்”

- Advertisement -

ரெய்னா கருத்து:

“2019 உலகக் கோப்பையில் பாபர் அசாமை அவர் கிளீன் போல்டாக்கியது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அந்த வகையில் அவரிடம் வித்தியாசமான திறன் இருக்கிறது. குல்தீப் பெரிய போட்டிகளில் அசத்துவதற்கான பெரிய அனுபவத்தைத் தன்னிடம் வைத்துள்ளார்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2023 உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகளை எடுத்த குல்தீப் நன்றாக பவுலிங் செய்தார்.

இதையும் படிங்க: கேஎல் ராகுலை வெச்சு இந்த மூளையற்ற சோதனை தேவையா? கம்பீரை சாடிய முன்னாள் இந்திய வீரர்

2024 டி20 உலகக் கோப்பையிலும் 5 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். மறுபுறம் வருண் ஐசிசி தொடர்களில் பெரியளவில் அசத்திய அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை. எனவே அவருக்கு துபாயில் நடைபெற உள்ள தொடரில் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

- Advertisement -