கோலி புலி மாதிரி.. இதை செஞ்சா 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் 2019 உ.கோ ரோஹித்தை பார்க்கலாம்.. ரெய்னா கருத்து

Suresh Raina
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கையுடன் நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருக்கிறார்கள். குறிப்பாக சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் அந்த இருவருமே சுமாராக பேட்டிங் செய்தார்கள். அவர்களுடைய ஆட்டத்தால் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் முதல் முறையாக வெளியேறியது.

அதனால் அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று வருங்கால வீரர்களுக்கு வழி விட வேண்டும் என்று ஒரு தரப்பு இந்திய ரசிகர்களே விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் அடுத்ததாக பிப்ரவரி மாதம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இந்தியாவை வெற்றி பெற வைத்து தங்களது இழந்த பெருமைகளை மீட்டெடுக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள்.

- Advertisement -

இந்தியாவின் புலிகள்:

இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா இந்திய அணியின் திறமையான அனுபவமிக்க புலிகளை போன்ற வீரர்கள் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். எனவே அவர்கள் சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் சுரேஷ் ரெய்னா பேசியது பின்வருமாறு.

“பெரிய பெயரைக் கொண்ட பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இல்லாத போது அடுத்த முறை களத்தில் சிறப்பாக விளையாட விரும்புவார்கள். அது போன்ற வீரர்கள் எப்போதும் அணிக்காக தங்களுடைய பெயருக்கு தகுந்தார் போல் விளையாட விரும்புவார்கள். அந்த வகையில் அவர்கள் இருவரும் தற்போது நல்ல ஃபார்மில் இல்லை. ஆனாலும் அவர்கள் புலிகள்”

- Advertisement -

ரெய்னா ஆதரவு:

“விராட் கோலி மூன்றாவது இடத்திலும் ரோஹித் சர்மா துவக்க வீரராகவும் தங்களுடைய சொந்த வழியில் இந்திய அணியை வெற்றி பெற வைப்பார்கள். 2011 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாத போது ரோஹித் சர்மா சோகமாக உணர்ந்தார். அதனால் 2013 சாம்பியன்ஸ் டிராபியில் அவர் அசத்த விரும்பினார். கடைசியாக இந்தியா அந்தத் தொடரை வென்ற இங்கிலாந்தை விட தற்போது தொடர் நடைபெறும் துபாய் வித்தியாசமாக இருக்கும்”

இதையும் படிங்க: இந்தியாவில் அது வேஸ்ட் தான் போல.. கருண் நாயரை கண்டு கொள்ளாத அகர்கர் மீது ஹர்பஜன் அதிருப்தி

“அந்த சூழ்நிலைகளை கையாள்வது பற்றி ரோகித் சர்மாவுக்கு தெரியும். ஒருவேளை அவர் 20 – 25 ஓவர்கள் வரை நங்கூரமாக விளையாடினால் 2019 உலகக் கோப்பையில் வெளிப்படுத்திய செயல்பாடுகளை போல ரோஹித் மீண்டும் வெளிப்படுத்தினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்” என்று கூறினார். 2019 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா 5 சதங்கள் உட்பட 648 ரன்கள் குவித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement