இந்தியாவில் அது வேஸ்ட் தான் போல.. கருண் நாயரை கண்டு கொள்ளாத அகர்கர் மீது ஹர்பஜன் அதிருப்தி

Harbhajan SIngh
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா, ஷமி, விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதே சமயம் சஞ்சு சாம்சன், முகமது சிராஜ், கருண் நாயர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அதில் கருண் நாயர் 2025 விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் தொடரில் கேப்டனாக அற்புதமாக விளையாடி விதர்பா அணியை ஃபைனல் வரை அழைத்துச் சென்றார். குறிப்பாக முதல் ஏழு போட்டிகளில் 752 ரன்களை 752 என்ற சராசரியை குவித்த அவர் 5 சதங்களை அடித்தார். அந்த ஏழு போட்டிகளில் 6 முறை அவுட்டாகாத அவர் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார்.

- Advertisement -

போராடியும் வாய்ப்பில்லை:

அதன் காரணமாக அவருக்கு சாம்பியன்ஸ் டிராபியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சில ரசிகர்கள் கேட்டுக்கொண்டனர். மேலும் கடினமான உழைப்பு மற்றும் கவனம் இல்லாமல் இவ்வளவு அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்த முடியாது என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டினார். அதனால் குறைந்தபட்சம் அடுத்ததாக நடைபெறும் இங்கிலாந்து ஒருநாள் தொடரிலாவது அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசியில் அவருக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை. அது பற்றி கேட்டதற்கு ஏற்கனவே விளையாடிய வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளதால் கருண் நாயருக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்தார். அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தினாலும் 15 வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதால் கருண் நாயரை சேர்க்க முடியவில்லை என்று அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

ஹர்பஜன் விமர்சனம்:

இந்நிலையில் உள்ளூரில் விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் வீரரை தேர்ந்தெடுக்கவில்லையெனில் இந்தியாவில் உள்ளூர் தொடர்களை நடத்துவது என்ன பயன்? என்று ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். இது பற்றி அஜித் அகர்கரை மறைமுகமாக அவர் ட்விட்டரில் சாடியுள்ளது பின்வருமாறு. “ஃபார்ம் மற்றும் செயல்பாடுகள் அடிப்படையில் நீங்கள் வீரர்களை தேர்ந்தெடுக்கவில்லை எனில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா? கருண் நாயர்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இப்போ தான் ஃபார்முக்கு வர உருப்படியான வேலையை செய்றாரு.. ரோஹித் முடிவை பாராட்டிய கவாஸ்கர்

மொத்தத்தில் 2016ஆம் ஆண்டு அறிமுகமான கருண் நாயர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரேந்திர சேவாக்கிற்கு பின் முச்சதத்தை அடித்து சாதனை படைத்தார். பின்னர் கொஞ்சம் சுமாராக விளையாடிய அவருக்கு 9 வருடங்களாக மறு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது முழு மூச்சுடன் போராடியும் அவருக்கு வாய்ப்பு பறிபோயுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement