இப்போ தான் ஃபார்முக்கு வர உருப்படியான வேலையை செய்றாரு.. ரோஹித் முடிவை பாராட்டிய கவாஸ்கர்

Sunil Gavaskar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் சுமாராக விளையாடி வருகிறார். அவருடைய சுமாரான ஆட்டத்தால் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் தோற்ற இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது. அதன் உச்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் தன்னைத்தானே அணியிலிருந்து நீக்கிக்கொண்ட முதல் இந்திய கேப்டனாக ரோஹித் மோசமான சாதனையும் படைத்தார்.

தற்போது 37 வயதாகும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது அவசியம் என்று கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் அறிவுறுத்தினர். அதை ஏற்றுக் கொண்ட ரோகித் சர்மா ரஞ்சிக் கோப்பையில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக மும்பை அணிக்காக விளையாட உள்ளார். அதன் வாயிலாக 2015க்குப்பின் 10 வருடங்கள் கழித்து அவர் ரஞ்சிக் கோப்பையில் விளையாட உள்ளார்.

- Advertisement -

கவாஸ்கர் பாராட்டு:

இந்நிலையில் ஃபார்முக்கு திரும்ப இப்போது தான் ரோகித் உருப்படியான முடிவை எடுத்துள்ளதாக சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் இது மிகவும் சிறந்த விஷயம். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் ரன்கள் அடிக்காத ரோஹித்துக்கு களத்தில் நேரத்தை செலவிட வேண்டும் என்பது தெரியும்”

“நீங்கள் எவ்வளவு தான் வலைப்பயிற்சி செய்தாலும் களத்தில் செய்யும் தவறு உங்களை பெவிலியனுக்கு அனுப்பி வைக்கும் என்பது தெரியும். அதே சமயம் ரன்கள் அடிப்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். வலைப்பயிற்சியில் நீங்கள் அவுட்டானாலும் மீண்டும் 20 – 40 நிமிடங்கள் பேட்டிங் செய்ய முடியும். அங்கே மீண்டும் மீண்டும் அவுட்டாகலாம். அது போன்ற பயிற்சி நல்லது கிடையாது”

- Advertisement -

உருப்படியான முடிவு:

“ஏனெனில் அங்கே உங்களுக்கு எந்த அழுத்தமும் கிடையாது. அல்லது விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமும் இருக்காது. அப்படிப்பட்ட வலைப்பயிற்சியில் நீங்கள் எவ்வளவு தான் பயிற்சி செய்தாலும் உண்மையான போட்டியில் உங்களுக்கு எதுவுமே சாதகமாக இருக்காது. எனவே ரோகித் சர்மா ரஞ்சிக் கோப்பையில் விளையாட உள்ளதை பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: டைம் கிடைக்கல அவ்ளோ தான் வேணும்ன்னு செய்யல.. 10 வருடத்துக்கு பின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரோஹித்

அடுத்ததாக ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதில் இடம் பிடிக்க ரோஹித் சர்மா ஃபார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதனாலேயே தற்போது அவர் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதற்கு வேறு வழியின்றி முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement