- Advertisement -
ஆசிய கோப்பை

இந்திய அணியை அதை வலுகட்டாயமா செய்ய வெச்சா இதான் நடக்கும்.. யாருக்குமே விருப்பமில்ல.. ரெய்னா விமர்சனம்

ஆசியக் கோப்பை 2025 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தங்களது முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று அசத்தியுள்ளது. குறிப்பாக 2வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா எளிதாக தோற்கடித்தது. இருப்பினும் அப்போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணியினர் கை கொடுக்காமல் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பாக காஷ்மீரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 மக்கள் இயற்கை எய்தினர். அதற்கு இந்திய அரசாங்கம் ராணுவ நடவடிக்கைகள் எடுத்து பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது. அதன் எதிரொலியாக இங்கிலாந்தில் நடைபெற்ற லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் யுவ்ராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணி கடைசி நேரத்தில் வெளியேறியது.

- Advertisement -

வலுகட்டாயமாக விளையாடுங்க:

அதே போல இப்போட்டியிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக் கூடாது என்று ஹர்பஜன் சிங், மனோஜ் திவாரி போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிராக ஐசிசி மற்றும் ஆசிய தொடர்களில் விளையாடத் தடையில்லை என்று இந்திய விளையாட்டுத்துறை அறிவித்தது. அதன் காரணமாக ஆசியக் கோப்பையில் விளையாடிய இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியும் கண்டது.

ஆனால் போட்டியின் முடிவில் கை கொடுக்க ஜென்டில்மேன்களாக காத்திருந்த பாகிஸ்தான் அணிக்கு கை கொடுக்காமல் இந்திய அணி வெளியேறியது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்தியாவின் உண்மையான முகம் அம்பலமாகியுள்ளதாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய வீரர்களுக்கு விருப்பமில்லாததாலேயே இப்படி நடந்துள்ளதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ரெய்னா அதிருப்தி:

அரசாங்கம் வலுக்கட்டாயமாக விளையாட வைத்தது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எனக்கு ஒரு விஷயம் உறுதியாகத் தெரியும். நீங்கள் தனிப்பட்ட முறையில் நம்முடைய வீரர்களிடம் கேட்டால் அவர்கள் யாருமே ஆசியக் கோப்பையில் விளையாட விரும்ப மாட்டார்கள். இருப்பினும் பிசிசிஐ விளையாட சம்மதம் தெரிவித்து விட்டதால் அவர்கள் வலுக்கட்டாயமாக விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்”

இதையும் படிங்க: பாகிஸ்தான் புகார்.. கை கொடுக்காத இந்திய அணிக்கு தண்டனை கிடைக்குமா? எம்சிசி விதிமுறை சொல்வது என்ன?

“பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடுவது எனக்கு சோகமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் சூரியகுமார் மற்றும் இந்திய வீரர்களிடம் தனிப்பட்ட கருத்துக்களை கேட்டால் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட விரும்பவில்லை என்றே அவர்கள் தெரிவித்திருப்பார்கள் என்ற உண்மையை நான் சொல்வேன். அவர்கள் யாரும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட விரும்பவில்லை” என்று கூறினார்.

- Advertisement -