பாகிஸ்தான் புகார்.. கை கொடுக்காத இந்திய அணிக்கு தண்டனை கிடைக்குமா? எம்சிசி விதிமுறை சொல்வது என்ன?

IND vs PAK 5
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய 2வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதனால் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற இந்தியா சூப்பர் 4 சுற்றை நெருங்கியுள்ளது. முன்னதாக அந்தப் போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணியினர் கை கொடுக்காதது பெரிய சர்ச்சையாக உண்டாக்கியுள்ளது.

சாதாரணமாகவே இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. அந்த சூழ்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 இந்திய மக்கள் இயற்கை எய்தினர். அதற்கு பாகிஸ்தான் மீது இந்திய அரசாங்கம் ராணுவ நடவடிக்கைகள் எடுத்து பதிலடி கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக இப்போட்டியில் இந்திய அணி தங்களுடைய எதிர்ப்பைக் காட்ட விரும்பியது.

- Advertisement -

பாகிஸ்தான் புகார்:

அதற்காக டாஸ் வீசிய பின் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுக்கு இந்திய கேப்டன் சூரியகுமார் கை கொடுக்கவில்லை. அத்துடன் போட்டி முடிந்த பின் பாகிஸ்தான் வீரர்கள் ஜென்டில்மேன்களாக கை கொடுக்க களத்தில் காத்திருந்தனர். இருப்பினும் அவர்களுக்கு கை கொடுக்காமல் இந்திய அணியினர் புறக்கணித்தனர். அதற்கு பதிலடியாக போட்டியின் முடிவில் நடந்த பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கேப்டன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.

இறுதியில் கோபமடைந்த பாகிஸ்தான் வாரியம் இந்திய அணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐசிசியிடம் புகார் கொடுத்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு கை கொடுக்காத இந்திய அணி விதிமுறைகளை மீறியுள்ளதா? என்பதைப் பற்றி பார்ப்போம். எம்சிசி கிரிக்கெட்டின் விளையாட்டுணர்வு விதிமுறைப்படி போட்டி முடிந்த பின் இரு அணிகளும் கைகொடுத்துக் கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

விதிமுறை சொல்வது என்ன:

இருப்பினும் கை குலுக்குவது கட்டாயம் என்று விதிமுறையில் சொல்லப்படவில்லை. இது பற்றி விதிமுறை சொல்வது பின்வருமாறு. “மரியாதை தான் கிரிக்கெட் விளையாட்டு உணர்வின் மையமாகும். எதிரணியின் வெற்றியை வாழ்த்துங்கள். அதை உங்கள் வெற்றியாக நினைத்து மகிழ்ச்சியடையுங்கள். போட்டியின் இறுதியில் முடிவு எதுவாக இருந்தாலும் நடுவர்கள் மற்றும் எதிரணிக்கு நன்றி சொல்லுங்கள். கிரிக்கெட் என்பது தலைமைத்துவம், நட்பு மற்றும் குழுப்பணியை ஊக்குவிக்கும் ஒரு அற்புதமான விளையாட்டாகும்”

இதையும் படிங்க: டி20 போட்டிகளில் இதை நான் தொடர்ந்து செய்யனும்.. அதுதான் என்னோட ஆசை – சூரியகுமார் யாதவ் பேட்டி

“குறிப்பாக அது விளையாட்டு உணர்வுடன் விளையாடப்படும் போது பல்வேறு தேசங்கள், கலாச்சாரங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்கிறது” என்று தெரிவிக்கிறது. சொல்லப்போனால் டாஸ் வீசிய பின் இரு அணிகளின் கேப்டன்கள் கைகுலுக்காமல் சென்ற போது அங்கிருந்த போட்டியின் நடுவர் ஆண்டி பைஃகிராப்ட் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே போல தற்போதும் பாகிஸ்தான் அணியின் புகாரை அவர் நிராகரிக்கவே வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement