இதற்காகத்தான் காத்திருக்கிறேன். சி.எஸ்.கே அணிக்காக உருகிய சுரேஷ் ரெய்னா – விவரம் இதோ

Raina

ஒருவழியாக கொரோனா வைரஸ் ஏற்படுத்திய கோர தாண்டவத்திற்கு இடையே காலவரையின்றி தள்ளிவைக்க பட்ட ஐபிஎல் தொடர் தற்போது மீண்டும் யுஏஇ நாட்டில் துவங்க இருப்பதாக ரசிகர்களுக்கு ஓர் அதிகாரபூர்வ நற்செய்தியை கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படெல் அறிவித்தார்.

ipl

இந்நிலையில் தற்போது இந்தத் தொடரை ரசிகர்கள் தற்போதே வரவேற்பு தொடங்கிவிட்டனர். மேலும் அதற்கு மேலாக நான்கு மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருக்கும் வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏற்கனவே மார்ச் மாத இறுதியில் துவங்க இருந்த இந்த தொடருக்காக மார்ச் மாதம் துவக்கத்திலேயே சென்னை வந்து பயிற்சியை மேற்கொண்ட சிஎஸ்கே அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா கொரோனா பாதிப்பினால் ஊர் திரும்பி அவரது சொந்த ஊரிலேயே பயிற்சியினை மேற்கொண்டு அதனை விடியோவாகவும் வெளியிட்டார்.

 

View this post on Instagram

 

Looking forward to the upcoming IPL with the CSK family and fans . Can’t wait to get there ! 💪#uae #blessed #happy

A post shared by Suresh Raina (@sureshraina3) on

இந்நிலையில் தற்போது ஐ.பி.எல் தொடர் குறித்த இந்த புதிய அறிவிப்பை முன்னிட்டு தனது மகிழ்ச்சியை இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் சுரேஷ் ரெய்னா பகிர்ந்துள்ளார். அதில் சிஎஸ்கே அணியுடனும், சிஎஸ்கே ரசிகர்களுடன் ஐபிஎல் தொடரில் இணைய காத்திருப்பதாகவும் அந்த அதற்க்காக பொறுக்கமுடியாமல் காத்திருக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அவரின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது. மேலும் இந்த பதிவிற்கு ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிலாக அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.