ஜடேஜாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்த சுரேஷ் ரெய்னா – வீடியோ

Jadeja
- Advertisement -

நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி மற்றும் ராஜஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டியில் இரண்டாவதாக ஆடிய ராஜஸ்தான் அணி ஆடியபோது முதல் ஓவரில் 2 ஆவது பந்தில் ரஹானே அடித்த பந்து கவர்திசை நோக்கி சென்றது. அப்போது அங்கிருந்த ஜடேஜா அதனை சிறப்பாக கேட்ச் பிடித்தார். இந்த விக்கெட்டினை கொண்டாடிய சுரேஷ் ரெய்னா ஜடேஜாவின் கன்னத்தில் முத்தமிட்டார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தோனி 46 பந்துகளில் 75 ரன்களை குவித்தார்.

அடுத்து 176 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் திரிபாதி மற்றும் ஸ்டோக்ஸ் தவிர மற்ற யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பேட்டிங் செய்யவில்லை. ஒரு கட்டத்தில் வெற்றியை நோக்கி சென்ற ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் பிராவோவின் அபாரமான பந்துவீச்சினால் 167 ரன்கள் மட்டுமே குவித்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிரடியாக ஆடிய தோனி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement