தோனி மட்டுமல்ல நானும் இந்திய அணிக்கு நிச்சயம் திரும்புவேன் – முன்னணி வீரர் நம்பிக்கை

Raina
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருப்பவர் சுரேஷ் ரெய்னா. இந்திய அணியில் கடந்த 2016 வரை நிரந்தர வீரராக இருந்தார் ரெய்னா. தோனி ஓய்வு பெற்ற பின்னர் அவருக்கு கோலியின் தலைமையில் பெரிதான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2018 ஆம் ஆண்டில் கடைசியாக இந்திய அணிக்காக ஆடினார். இருந்தும் தொடர்ந்து இந்திய அணியின் இடத்திற்காக போராடி வந்தார்.

Raina

- Advertisement -

இதன் காரணமாக தற்போது வரை இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று பேசியுள்ளார் ரெய்னா. இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னை நானே தற்போது திருத்திக் கொண்டு வருகிறேன். எனக்கு முட்டியில் காயம் ஏற்பட்டது.

அதிலிருந்து மீண்டு தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளேன். ‘யோ யோ’ பயிற்சியிலும் வெற்றி பெற்றுள்ளேன். இந்திய அணியில் இடம் பிடிக்க கடுமையாக முயற்சி செய்து வருகிறேன். இது எனது கடினமான காலகட்டம். இந்த கடினமான சூழ்நிலையிலும் பல மூத்த வீரர்கள் எனக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.

Raina

எனக்கான இடம் சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் இருக்கிறது. மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று பேசியுள்ளார் சுரேஷ் ரெய்னா. இந்திய அணிக்காக 2005 ஆம் ஆண்டு முதல் ஆடி வருகிறார் ரெய்னா. 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற அணியில் மிக முக்கியமான இடம் பிடித்திருந்தார்.

- Advertisement -

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தோனியின் காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு வீரராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஷ் ரெய்னா இந்திய அணியின் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடியது மட்டுமின்றி தனது அசத்தலான பீல்டிங் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இந்திய அணியில் அனைத்து காலகட்டங்களையம் வைத்து பார்த்தாலும் ரெய்னா சிறந்த பீல்டராகவே கருதப்படுகிறார்.

Raina

மேலும் சென்னை சி.எஸ்.கே அணியின் துவக்க சீசனில் இருந்து தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறார். தோனிக்கு அடுத்து சென்னை அணியின் சின்ன தல என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப ஆர்வம் காட்டிவருவதால் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியினை ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலமாக வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement