ஐ.பி.எல் வரலாற்றில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய சுரேஷ் ரெய்னா – இப்படி ஒரு சாதனையா ?

Raina
- Advertisement -

நேற்று நடைபெற்ற ஐபிஎல்லின் 23வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். முதல் இன்னிங்சை தொடங்கிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான ஜானி பேர்ஸ்டோ நான்காவது ஓவரிலேயே அவுட்டாகி வெளியேறினார்.

warner 1

- Advertisement -

பின்பு வார்னருடன் இணைந்த மணிஷ் பண்டே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார். இறுதி ஓவர்களில் வில்லியம்சன் அதிரடியாக ஆடியதால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனர்களான ருத்துராஜ் கெய்க்வாட்டும், டுயூப்ளசிஸும் 78 பந்துகளில் 129 ரன்கள் சேர்த்து அந்த அணிக்கு நல்ல வலுவான தொடக்கத்தை கொடுத்தனர்.

இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு புள்ளிகளை பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் புள்ளிப் படலடியலில் முதல் இடத்திற்கு சென்றுள்ளது. இப் போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான சுரேஷ் ரெய்னா ஒரு மகத்தான சாதனையை படைத்தார்.

raina 1

இரண்டாவது இன்னிங்சை ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் மொயின் அலி 15வது ஓவரில் அவுட்டாகி வெளியேறியதும் களத்திற்கு வந்த சுரேஷ் ரெய்னா சித்தார்த் கவுல் வீசிய 17-வது ஓவரின் இரண்டாவது பந்தில் மிட் விக்கெட் திசையில் ஒரு பவுண்டரி அடித்து, ஐபிஎல் தொடர்களில் 500 பவுண்டரிகள் அடித்த 4வது வீரர் என்ற சாதனையை படைத்தார். 2008ஆம் ஆண்டு சென்னை அணிக்காக அறிமுகமான சுரேஷ்ரெய்னா இதுவரை ஐபிஎல் தொடர்களில் 199 போட்டிகளில் விளையாடி 502 பவுண்டரிகளும் 202 சிக்ஸர்களையும் அடித்துள்ளார்.

raina

இதுவரை நடைபெற்றுள்ள ஐபிஎல் தொடர்களில் அதிகமான பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவான் 524 பவுண்டரிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து டேவிட் வார்னர்(525 பவுண்டரிகள்), விராட் கோலி (521 பவுண்டரிகள்), சுரேஷ் ரெய்னா (502 பவுண்டரிகள்) ஆகியோர் உள்ளனர்.

Advertisement