நான் இன்னும் இத்தனை ஆண்டுகள் சி.எஸ்.கே அணிக்காக விளையாடுவேன். சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளிவைத்த ரெய்னா

Raina-1
- Advertisement -

2020 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்னை அணி அண்மையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துபாய்க்கு சென்றது. இந்நிலையில் சென்னை அணியில் கொரோனா வைரஸ் தாக்கம் 13 பேரை பாதித்தது. அதற்கடுத்து அதிரடியாக சுரேஷ் ரெய்னாவின் உறவினர்கள் மர்ம கும்பல் தாக்கப்பட்டதால் அவர் அங்கிருந்து இந்தியா திரும்பினார். மேலும் இதனை தொடர்ந்து சிஎஸ்கே அணி நிர்வாகம் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்றும் கூறியது.

Raina

- Advertisement -

மேலும் தோனியுடன் பிரச்சினை எனவும் ரெய்னா சிஎஸ்கே நிர்வாகத்தின் மீது அதிர்ப்தியாக இருந்ததுமே காரணம் என்றும் அதனாலே ரெய்னா இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியது. இந்த அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் சோகத்தில் மூழ்கினர்.

இந்நிலையில் தற்போது இந்த நிலை குறித்து cricbuzz இணையதளத்திற்கு பேட்டி ஒன்றினை சுரேஷ் ரெய்னா அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இது ஒரு தனிப்பட்ட முடிவு நான் எனது குடும்பத்திற்காகவே நான் திரும்பிப் போக வேண்டிஇருந்தது. சிஎஸ்கே எனது குடும்பம் மற்றும் டோனி எனக்கு மிகவும் முக்கியமானவர்.

Raina 3

இது ஒரு கடினமான முடிவு தான் இருப்பினும் எனக்கு தற்போதைய சூழ்நிலையில் என்னுடைய குடும்பத்துடன் இருக்க வேண்டிய அவசியம் ஆகிவிட்டது. சிஎஸ்கே மற்றும் எனக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் தோனியுடனும் எனக்கு எந்தவித மனக்கசப்பும் இல்லை. ஏதோ சரியான காரணமும் இன்றி யாரும் 12.5 கோடியை விட்டு செல்ல மாட்டார்கள்.

Raina

நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருக்கலாம். ஆனால் நான் இன்னும் இளமையுடன் தான் இருக்கிறேன். இன்னும் 4 முதல் 5 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடவே எதிர்பார்ப்பேன் என்று ரெய்னா தெரிவித்துள்ளார்.

Advertisement