36 வயதான சி.எஸ்.கே வீரர் வாய்ப்பு கிடைக்காமல் பேருந்து டிரைவராக பணியாற்றும் பரிதாபம் – யார் தெரியுமா ?

Suraj

பொதுவாகவே கிரிக்கெட் வீரர்கள் என்றால் கோடிகளில் சம்பளம் பெற்று சொகுசான ஆடம்பர வாழ்க்கையை வாழும் நபர்களாகவே நாம் பலரை பார்த்து வருகிறோம். ஆனால் அப்படி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியும் தங்களிடம் தேவையான அளவு பணம் இல்லாத காரணத்தினால் கிரிக்கெட் கரியருக்கு பின்பு பல்வேறு வேலைகள் செய்யும் சில வீரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் அவ்வப்போது நாம் சில வீரர்களை பார்த்து வருகிறோம்.

suraj 3

இந்நிலையில் தற்போது இலங்கை அணியின் வீரரான சூரஜ் ரந்தீவ் (36 வயது) என்பவர் ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருவது தற்போது இணையத்தில் வைரலான செய்தியாக மாறியுள்ளது. 36 வயதான சூரஜ் ரந்தீவ் இலங்கை அணிக்காக கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகமாகி 2016 வரை சர்வதேச கிரிக்கெட்டில் 31 ஒருநாள் போட்டிகள், 12 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

- Advertisement -

மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து 86 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு கடைசியாக ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக விளையாடிய அவர் அதன்பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார். ஒருகட்டத்தில் குடும்பச் செலவிற்கு கூட பணம் இல்லாமல் தவித்த அவர் தனது வாழ்வாதாரத்திற்காக இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா சென்று தற்போது மெல்போர்ன் நகரில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

suraj 2

வலது கை ஆஃப் ஸ்பின்னரான இவர் 2011 ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப் போட்டியிலும் விளையாடியுள்ளார். இவர் தற்போது பேருந்து ஓட்டுநராக பணியாற்றும் செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது. அது மட்டுமின்றி அது குறித்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

suraj 1

பேருந்து ஓட்டுநராக பணியாற்றும் நேரம் போக உள்ளூர் தொடர்களில் அவர் கிளப் போட்டிகளில் கிரிக்கெட் விளையாடி வருகிறார். அதேபோன்று இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதும் அவரை நெட் பவுலராக பந்துவீச ஆஸ்திரேலிய அணி அழைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக விளையாடியது மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்காகவும் சூரஜ் ரந்தீவ் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement