சூப்பர் மேன் சஹா கோலி சொன்னது தப்பே இல்லை – வைரலாகும் வீடியோ

Saha
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி கொல்கத்தா மைதானத்தில் பகலிரவு போட்டியாக இன்று துவங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மொமினுள் ஹக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணி 30.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசி 22 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இரண்டாவது சேஷனிலே முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்துள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சிறப்பாக சஹா சிறப்பாக செயல்பட்டார். பிங்க் பந்து கேட்ச் செய்வதற்கு கடினமாக இருக்கும் என்று கூறிய நிலையில் இன்றைய போட்டியில் கீப்பிங்கில் அசத்தினார் சகா. அதிலும் குறிப்பாக வங்கதேச அணியின் வீரரான முகமதுல்லா விக்கெட்டை அவர் கேட்ச் பிடித்த விதம் அனைவரையும் கவர்ந்தது.

இஷாந்த் சர்மா வேகத்தில் பந்து எட்ஜ் ஆகி கோலி இடம் செல்ல கீப்பிங் செய்து கொண்டிருந்த சஹா அதனை டைவ் அடித்து ஒற்றைக் கையால் பிடித்து அசத்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டெஸ்ட் அணிக்கு சஹா திரும்பும் போது தற்போதைய உலகின் மிகச்சிறந்த கீப்பர் சகா தான் என்று கூறிப் புகழ்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement