சூப்பர் ஓவரின் 5 விதிகள் என்னென்ன தெரியுமா ?

England
- Advertisement -

2019 உலகக்கோப்பை இறுதி போட்டி டையில் முடிந்த பிறகு சூப்பர் ஓவர் வீசப்பட்டது. அதிலும் இரு அணிகளும் சமமான ரன்களை அடித்து சூப்பர் ஓவரும் டை ஆனது. இந்த நிலையில் சூப்பர் ஓவர் விதிகளின் படி இங்கிலாந்து வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சூப்பர் ஒவேரில் என்னென்ன விதிகள் உள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

England

விதி 1 : அணிக்காக தேர்வு செய்யப்பட்ட 11 பேர் மட்டுமே சூப்பர் ஓவரில் பங்குபெற முடியும். அதிலும் குறிப்பாக 3 பேட்ஸ்மேன்கள் மற்றும் ஒரு பௌலர் மட்டுமே சூப்பர் ஒவேரில் விளையாட முடியும்.

- Advertisement -

விதி 2 : இறுதி போட்டியில் யார் இரண்டாவதாக பேட்டிங் செய்கிறார்களோ அவர்களே சூப்பர் ஓவரில் முதலாவதாக பேட்டிங் செய்ய வேண்டும்.

விதி 3 : சூப்பர் ஓவரில் எந்த அணி அதிக ரன்கள் குவிக்கிறதோ அந்த அணியே வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும்.

- Advertisement -

விதி 4 : சூப்பர் ஒவேரில் ஒரு அணி 2 விக்கெட்களை இழந்தால் அந்த அணியின் சூப்பர் ஓவர் முடிவிற்கு வரும்.

விதி 5 : ஒருவேளை சூப்பர் ஓவர் டையில் முடிந்தால், அதிக பௌண்டரி அடித்த அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். அந்த இன்னிங்சின் பௌண்டரி மற்றும் சூப்பர் ஓவரின் பௌண்டரி ஆகியே இரண்டும் இதில் கணக்கெடுக்கப்படும்.

England

மேலே கூறப்பட்டுள்ள விதிகளில் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக அமைந்தது இறுதி விதி தான். நேற்றைய போட்டியில் அவர்களே அதிக பௌண்டரி அடித்தனர். அதோடு சூப்பர் ஓவரிலும் அவர்கள் அதிக பௌண்டரிகளை குவித்தனர். அதன் காரணமாக அவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

newzeland

சூப்பர் ஓவரில் நியூஸிலாந்து அணி ஒரு சிக்ஸ் அடித்தது. ஆனாலும் அவர்களால் வெற்றி வாய்ப்பை பெற முடியவில்லை. இறுதியில் கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து அணி முதல் முறையாக உலகக்கோப்பையை கையில் ஏந்தி மகிழ்ச்சியில் திளைத்தது.

Advertisement