- Advertisement -
ஐ.பி.எல்

புதிய வீரரை பிரித்து எடுத்த சுனில் நரேன். ஒரே ஓவரில் இத்தனை ரன்களா ? – வீடியோ

இன்று இரவு 8 மணிக்கு துவங்கிய 6ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியுள்ளது.

முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரேன் மற்றும் க்றிஸ் லின் ஆகியோர் களமிறங்கினார். முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. அடுத்த ஓவரை அறிமுக வீரர் வருண் சக்கரவர்த்தி வீசினார்.

- Advertisement -

இந்த ஓவரை எதிர்கொண்ட நரேன் 3 சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரி என அந்த ஓவரில் தனது பங்கிற்கு 24 ரன்களை அடித்தார். அந்த ஓவரை சிதறடித்த நரேன் ரசிகர்களுக்கு விருந்தினை வைத்தார். இதோ அந்த வீடியோ :

தற்போது வரை கொல்கத்தா அணி 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை அடித்துள்ளனர். ராணா 63 ரன்களுடனும் உத்தப்பா 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆகையால், கொல்கத்தா அணி எளிதாக 210 ரன்களை கடக்கும் என நம்பலாம்.

- Advertisement -
Published by