ஜஸ்ட் மிஸ். கொஞ்ச நேரத்துல யுவராஜ் சிங் ரெக்கார்ட் காலி ஆகியிருக்கும் – தெறிக்கவிட்ட சுனில் நரேன்

Narine
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற்று வருவதைப் போன்று உலகெங்கிலும் டி20 தொடர்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ், பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் வங்கதேசத்தில் நடைபெற்று வரும் வங்கதேச பிரீமியர் லீக் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவை. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வங்கதேச பிரீமியர் லீக் தற்போது நடைபெற்று வருகிறது.

bpl

- Advertisement -

இந்த தொடரின் முதல் சுற்று போட்டிகள் அனைத்தும் நடைபெற்ற வேளையில் தற்போது குவாலிபயர் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ள வேளையில் தற்போது இரண்டாவது குவாலிபயர் போட்டி நேற்று சொட்டகிராம் சேலஞ்சர்ஸ் மற்றும் கொமிலா விக்டோரியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய சொட்டகிராம் 19.1 ஓவரில் 148 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணி சார்பாக அதிகபட்சமாக மெஹதி ஹாசன் 44 ரன்களும் அக்பர் அலி 33 ரன்களும் குவித்தனர். அதனை தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொமிலா அணி 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 149 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

narine 1

இந்த போட்டியில் மாற்று துவக்க வீரராக களமிறங்கிய சுனில் நரைன் அதிரடியாக விளையாடியது அந்த அணிக்கு எளிதாக வெற்றி பெற்று கொடுத்தது என்றே கூறலாம். மேலும் நேற்று இவர் விளையாடிய விதத்தை பார்க்கும் போது யுவராஜ் சிங்கின் சாதனை முறியடிக்கப்படும் என்று தோன்றியது. ஏனெனில் தான் சந்திக்கும் பந்துகளை எல்லாம் பவுண்டரிகளும், சிக்சருமாக விளாசிய சுனில் நரேன் ஒரு கட்டத்தில் 12 பந்துகளுக்குள் 50 ரன்கள் எடுப்பார் என்று தோன்றியது.

- Advertisement -

ஆனால் இறுதியில் அவரால் 13 பந்துகளில் மட்டுமே அரைசதம் அடிக்க முடிந்தது. இதன் காரணமாக யுவராஜ் சிங்கின் 12 பந்துகளில் 50 ரன்கள் சாதனை ஒரு பந்து வித்தியாசத்தில் அவர் தவறவிட்டார். இந்த போட்டியில் 16 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்கள் என 57 ரன்களை பறக்கவிட்டார். இதற்கு முன்னதாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை யுவராஜ்சிங் வைத்துள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் முழு அணி – உத்தேச ப்ளேயிங் 11 இதோ

2007-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற உலகக்கோப்பை டி20 போட்டியில் தொடர்ச்சியாக 6 சிக்சர்களை விளாசிய யுவ்ராஜ் 12 பந்துகளில் 50 ரன்களை கடந்து இருந்தார். அவருக்கு அடுத்து தற்போது இரண்டாவது இடத்தில் சுனில் நரேன் உள்ளார். மேலும் அந்த 12 பந்துகளில் 50 ரன்கள் சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ஹசரதுல்லா சசாய் ஆகியோர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement