ஐபிஎல் 2022 : நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் முழு அணி – உத்தேச ப்ளேயிங் 11 இதோ

CSK-2
- Advertisement -

ஐபிஎல் 2022 சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதில் பங்கேற்ற 590 வீரர்களில் இருந்து 204 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த ஏலத்தில் 204 வீரர்களை வாங்குவதற்காக 551 கோடிகளை மொத்தமாக அனைத்து அணிகளும் செலவு செய்துள்ளன. இந்த ஐ.பி.எல் தொடர் கொரோனா அச்சம் காரணமாக குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே நடைபெறவுள்ளன.

CSK

- Advertisement -

இந்த மெகா ஏலத்தில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்று ஐபிஎல் வரலாற்றில் 2வது வெற்றிகரமான அணியாக விளங்கும் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுக்கு தேவையான 25 பேரையும் வாங்கியுள்ளது. இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, மொய்ன் அலி, ருத்ராஜ் கைக்வாட் ஆகிய 4 முக்கிய வீரர்களை அந்த அணி நிர்வாகம் ஏற்கனவே தக்க வைத்திருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ்:
மொத்தம் அனுமதிக்கப்பட்ட 90 கோடிகளில் இவர்களுக்கு செலவு செய்த 42 கோடிகள் போக 48 கோடி மீதி தொகையுடன் இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியது. அதை தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் எஞ்சிய 21 வீரர்களை 87.05 கோடிகள் செலவில் வாங்கியுள்ள அந்த அணி நிர்வாகத்திடம் 2.95 கோடிகள் மீதி உள்ளது.

CSK-Auction

அதிகபட்சமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹரை 14 கோடிகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியுள்ளது. இருப்பினும் சுரேஷ் ரைய்னா, ஃபப் டு ப்ளெசிஸ் போன்ற வீரர்களை அந்த அணி வாங்காதது பெரிய ஆச்சர்யமாக உள்ளது. இந்த 25 பேர் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 17 இந்திய வீரர்களும் 8 வெளிநாட்டு வீரர்களும் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதோ:
எம்எஸ் தோனி (கேப்டன் – 12 கோடி), ரவீந்திர ஜடேஜா (16 கோடி), மொய்ன் அலி (8 கோடி), ருதுராஜ் கைக்வாட் (6 கோடி), தீபக் சஹர் (14 கோடி), ராபின் உத்தப்பா (2 கோடி, அம்பத்தி ராயுடு (6.75 கோடி), டேவோன் கோன்வே (1 கோடி), சுபிரான்ஷு சேனாபதி (20 லட்சம்), கேஎம் ஆசிப் (20 லட்சம்), துஷார் தேஷ்பாண்டே (20 லட்சம்), மகேஸ் தீக்ஷனா(70 லட்சம்), சிமர்ஜீத் சிங் (20 லட்சம்), ஆடம் மில்னே (1.90 கோடி), முகேஷ் சௌத்திரி( 20 லட்சம்), ட்வயன் ப்ராவோ (4.40 கோடி), ஷிவம் துபே (4 கோடி), ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் (1.50 கோடி), டிவைன் பிரிடோரிஸ் (50 லட்சம்), மிட்செல் சாண்ட்னெர் (1.9 கோடி), பிரஷாந்த் சோலங்கி (1.20 கோடி), நாராயண் ஜெகதீசன் (20 லட்சம்), ஹரி நிஷாந்த் (20 லட்சம்), கிறிஸ் ஜோர்டான் (3.6 கோடி), பகத் வர்மா (20 லட்சம்)

chennai

இந்த மெகா ஏலத்தின் முடிவில் மொத்த அணியில் இருந்து களத்தில் விளையாட சரியாக பொருந்த கூடிய திறமையான 11 வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு அணி நிர்வாகத்துக்கு உள்ளது. அந்த வகையில்

ஐபிஎல் 2022 தொடரில் களமிறங்க போகும் உத்தேச சென்னை சூப்பர் கிங்ஸ் 11 பேர் அணி இதோ:
ருதுராஜ் கைக்வாட், டேவோன் கான்வே*, மொய்ன் அலி*, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, எம்எஸ் தோனி (கேப்டன்/கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, ட்வயன் ப்ராவோ*, தீபக் சஹர், கிறிஸ் ஜோர்டான்/ஆடம் மில்னே*.

Advertisement