KKR vs RCB : மான்கட் முறையில் அவுட் செய்ய நினைத்த நரேன். மூக்குடைத்த கோலி – வீடியோ

நேற்று நடந்த பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிரான போட்டியில் சுவாரசியமான நிகழ்வு ஒன்று நடந்தது. இந்த போட்டியில் 18 ஆவது ஓவரை வீசிய சுனில் நரேன் 5 ஆவது பந்தினை வீச

Kohli
- Advertisement -

நேற்று நடந்த பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிரான போட்டியில் சுவாரசியமான நிகழ்வு ஒன்று நடந்தது. இந்த போட்டியில் 18 ஆவது ஓவரை வீசிய சுனில் நரேன் 5 ஆவது பந்தினை வீச வரும்போது பந்தினை வீசாமல் நிறுத்தினார். இதைக்கண்ட கோலி கிரீஸ் விட்டு சற்று வெளியில் இருந்தாலும் பேட்டை கிரீஸில் வைத்தார். பின்பு அப்படியே தரையில் அமர்ந்து அவரை கிண்ட செய்தார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

சிலபோட்டிகளுக்கு முன்பு பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் ராஜஸ்தான் வீரரான ஜாஸ் பட்லரை மான்கட் முறையில் அவுட் செய்து வெளியேற்றியது பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி. தொடரின் 35 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியில் மோதின.

- Advertisement -

Kohli

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது கொல்கத்தா அணி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 58 பந்துகளில் 100 ரன்களும், மொயின் அலி 28 பந்தில் 66 ரன்களையும் குவித்தனர்.

Moeen

பிறகு 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை மட்டுமே அடித்தது. இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது. ரசல் 25 பந்துகளில் 65 ரன்களும், ராணா 46 பந்துகளில் 85 ரன்களையும் குவித்தனர். பெங்களூரு அணி வெற்றியை ருசித்தது கேப்டன் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisement