
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரேன் கடந்த 2012 ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அறிமுகமானார். இதுவரை கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்ற மூன்று முறையும் அந்த அணியின் முக்கிய வீரராக செயல்பட்டு வந்த சுனில் நரேன் பல்வேறு முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவும் அமைந்துள்ளார் .
நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரின் 60-வது லீக் ஆட்டத்திலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கே பங்கேற்று விளையாடியிருந்தார். இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் சுனில் நரேன் ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றிணையும் நிகழ்த்தி அசத்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
நேற்றைய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டி அவரது 200-வது ஐ.பி.எல் போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுனில் நரேன் 4 ஓவர்கள் பந்துவீசி 29 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகளில் அவர் நிகழ்த்திய வரலாற்று சாதனை யாதெனில் : கடந்த 2012 ஆம் ஆண்டு இதே கொல்கத்தா அணிக்காக அறிமுகமான அவர் இதுவரை 200 போட்டிகளில் விளையாடி வெளிநாட்டு வீரர்களில் முதல் வீரராக 200 ஐ.பி.எல் போட்டிகளை பூர்த்தி செய்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதோடு ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல் போட்டிகளில் 200 ஆட்டங்களில் விளையாடிய 13-வது வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : குஜராத் அணியை வீழ்த்தி பெற்ற இந்த வெற்றிக்கு இவர்களே முழு காரணம் – அஜின்க்யா ரஹானே பாராட்டு
இதுவரை 200 போட்டியில் விளையாடியுள்ள அவர் 203 விக்கெட்டுகளையும், 1820 ரன்களையும் விளாசியுள்ளார். அதோடு இந்த 2026 ஐ.பி.எல் தொடரில் மட்டும் 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள சுனில் நரேன் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.