இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருபவர் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த சுனில் நரேன் விளையாடிவருகின்றார்.மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரேன் பேட்டிங்கிலும் அசத்தி வரும் ஆல்ரவுண்டராக கலக்கி வருகின்றார்.
கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கேப்டன் தினேஷ் கார்த்திக்கிற்கு பக்கபலமாக செயல்பட்டு வரும் சுனில்நரேன் ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை டெல்லிக்கு எதிரான லீக்போட்டியில் செய்துள்ளார்.டெல்லிக்கு எதிரான லீக்போட்டியில் சிறப்பாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
டெல்லிக்கு எதிரான போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்திய போது ஐபிஎல் போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய முதல் வெளிநாட்டு வீரர் என்கிற சாதனையை சுனில் நரேன் படைத்தார்.இதுவரையிலும் 86 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில்நரேன் மொத்தமாக 102 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதில் 6 முறை நான்கு விக்கெட்டுகளையும், ஒரு முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒரு ஓவரில் சுனில்நரேனின் ரன் சராசரி 6.28 ஆகும்.முன்னதாக பாகிஸ்தான் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சுனில் நரேன் பந்தை எறிவதாக நடுவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.இதனால் அவர் இந்த ஐபிஎல்-இல் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.