இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவர் இவர்தான் – அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி – இதுதான்

Joshi
- Advertisement -

எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான இந்திய தேர்வுக் குழுவின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து இந்திய முன்னாள் வீரர் சுனில் ஜோஷி தேர்வுக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் . தேர்வுக் குழுவை தேர்வு செய்வதன் பணி இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் கையில் உள்ளது.

Prasad

- Advertisement -

இந்த குழுவின் தலைமை ஆலோசகராக மதன்லால் இருக்கிறார். புதிய தேர்வுக்குழுவிற்காக ஐந்து முன்னாள் வீரர்களான சிவராமகிருஷ்ணன் ,வெங்கடேஷ் பிரசாத், ராஜேஷ் சவுகான் ,சுனில் ஜோஷி ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களிடம் முக்கியமாக தோனியை எவ்வாறு கையாளப் போகிறார்கள்? தோனி ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடினால் அவரை டி20 உலக கோப்பை தொடருக்கு தேர்வு செய்வீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

Prasad

இதற்கு எதார்த்தமாகவும் தெளிவாகவும் பதில் கொடுத்த சுனில் ஜோஷியை தேர்வு செய்துள்ளனர். மேலும் விராட் கோலி என்ற பெரும் ஆளுமையை எவ்வாறு கையாளப் போகிறார்கள்? எனவும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

- Advertisement -

விராட் கோலி எளிதாக அணுக முடியாத நபர் . முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ளேவை அணியில் இருந்து வெளியேற்ற அவர் செய்த காரியங்கள் என்னென்ன, என அனைவருக்கும் தெரியும்.

Joshi 1

இவ்வாறு ஒரு அழுத்தமான நபரை எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்றும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு தெளிவான பதிலை கொடுத்த சுனில் ஜோஷி தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்தவரான எல் சிவராமகிருஷ்ணன் தேர்வுக்குழு தலைவராக இருப்பதே விருப்பம் என விலகிவிட்டார். இதன் காரணமாக அவர் தேர்வு குழு உறுப்பினராக நியமிக்கப்படவில்லை.

Advertisement