அதை செய்யாத நீங்க சச்சினை விட பெருசா? தோல்விக்கு காரணமான விராட், ரோஹித்தை விளாசிய சுனில் ஜோசி

Sunil Joshi
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. அத்துடன் 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் முதல் முறையாக இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை பதிவு செய்துள்ளது.

இந்த தோல்விக்கு பவுலர்கள் சிறப்பாக விளையாடியும் பேட்ஸ்மேன்கள் நன்றாக செயல்படாதது முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக பொறுப்புடன் செயல்பட வேண்டிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. அதிலும் குறிப்பாக சுழலுக்கு சாதகமான புனே பிட்ச்சில் அவர்கள் இருவரும் 20 ரன்கள் கூட எடுக்காதது தோல்விக்கு முக்கிய காரணமானது.

- Advertisement -

சூப்பர் ஸ்டார்களாக:

இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாததே இந்த தடுமாற்றத்திற்கு காரணம் என்று முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர் சுனில் ஜோஷி தெரிவித்துள்ளார். ஆனால் சச்சின் டெண்டுல்கர் போன்ற முந்தைய பெரிய ஜாம்பவான் வீரர்கள் ஓய்வு பெறும் வரை அவ்வப்போது உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே சச்சினை விட நீங்கள் பெரியவர்களா? என்று மறைமுகமாக விமர்சிக்கும் சுனில் ஜோசி இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாம் சுழல் பந்துகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மறந்து விட்டோம். நம்முடைய ஸ்பின்னர்கள் சொந்த மண்ணில் வெற்றிகளை பெற்றுக் கொடுக்கிறார்கள். எனவே நமது பேட்ஸ்மேன்கள் எப்படி சுழலை எதிர்கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்”

- Advertisement -

சச்சினை விட நீங்க பெருசா:

“இங்கே நம்முடைய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்களா? என்பதை பார்க்க வேண்டும். ஒருவேளை அவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடவில்லை எனில் ஸ்பின்னர்களையும் சிறப்பாக எதிர்கொள்ள முடியாது. முந்தைய காலங்களில் ஒவ்வொரு பெரிய நட்சத்திர வீரர்களும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிவிட்டு கிரிக்கெட்டில் விளையாடச் செல்வார்கள்”

இதையும் படிங்க: கவாஸ்கர், சச்சின் மாதிரி பிளேயர்ஸ் நமக்கு அங்க கிடைப்பாங்க.. விராட், ரோஹித்தை விமர்சித்த ஹர்பஜன் சிங்

“ஆனால் இப்போதைய வீரர்கள் ஏன் விளையாடுவதில்லை? ஏனெனில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது அவ்வளவு சுலபமல்ல” என்று கூறினார். அவர் கூறுவது போல 2013இல் ஓய்வு பெற்ற சச்சின் கடைசியாக 2015-16 ரஞ்சிக் கோப்பையில் விளையாடினார். ஆனால் விராட் கோலி 2012க்குப்பின் ரஞ்சிக் கோப்பை பக்கம் தலை வைத்தே படுக்கவில்லை. அதே போல 2016க்குப்பின் ரோகித் சர்மாவும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement