ப்ராட்மேனுக்கே இப்படி ஆகிருக்கு.. காபாவில் கோலி குக், என்னோட சாதனையை சமன் செய்யனும்.. கவாஸ்கர் ஆசை

Sunil gavaskar
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்திய அணியை இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அதன் காரணமாக சமனில் இருக்கும் இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் துவங்குகிறது.

அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அசத்துவது அவசியமாகிறது. குறிப்பாக சமீபத்தில் தடுமாறி வந்த விராட் கோலி இத்தொடரின் முதல் போட்டியிலேயே சதமடித்தார். அதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த ஆசிய வீரர் என்ற சச்சின் சாதனையை உடைத்து அவர் வரலாறு படைத்தார்.

- Advertisement -

கவாஸ்கர் விருப்பம்:

ஆனால் 2வது போட்டியில் மீண்டும் சொதப்பிய விராட் கோலி இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். இந்நிலையில் அடிலெய்ட், பெர்த், மெல்போர்ன், சிட்னி மைதானங்களில் ஏற்கனவே விராட் கோலி சதத்தை அடித்துள்ளார். எனவே பிரிஸ்பேனில் நடைபெறும் 3வது போட்டியில் சதமடித்து ஆஸ்திரேலியாவின் 5 முதன்மை மைதானங்களிலும் சதமடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற இங்கிலாந்தின் அலெஸ்டர் குக் மற்றும் தம்முடைய சாதனையை விராட் கோலி சமன் செய்ய வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை பிரிஸ்பேனில் விராட் கோலி சதம் அடித்தால் அது சிறப்பாக இருக்கும். அதன் வாயிலாக ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து மைதானங்களிலும் சதத்தை அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் சேர்வது ஒரு ஊக்கமாக இருக்கும். பின்னர் அவர் ஏற்கனவே சதங்கள் அடித்த மெல்போர்ன், சிட்னிக்கு செல்வார்”

- Advertisement -

ப்ராட்மேனும் தடுமாறிருக்காரு:

“அங்கே ஏற்கனவே உள்ள அனுபவத்தை வைத்து அவரால் சதங்களை அடிக்க முடியும். எனவே இந்த தொடரில் விராட் கோலி 4 சதங்களை அடிக்க முடியும். சொல்லப்போனால் ஒரு தொடரின் அனைத்து போட்டிகளிலும் டான் பிராட்மேன் கூட சதமடித்ததில்லை. எனவே இப்படி நீங்கள் ஒரு போட்டியில் சுமாராக விளையாடியதில் கவலையில்லை”

இதையும் படிங்க: தோனி லீடர் மாதிரி பாத்ததில்ல.. அவரை மேட்ச் வின்னரை மாற்றி.. என் பேரன்கிட்ட பேசுனாரு.. லக்னோ ஓனர் வியப்பு

“அடிலெய்டில் சந்தித்த தோல்வி எஞ்சிய 3 போட்டிகளில் அசத்துவதற்கான உத்வேகத்தை விராட் கோலிக்கு கொடுக்கும் என்று நம்புகிறேன். அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் மட்டும் அவர் கொஞ்சம் தடுமாற்றத்தைக் கொண்டுள்ளார். உண்மையில் அனைத்து பேட்ஸ்மேன்களும் அங்கே தடுமாற்றத்தை கொண்டிருப்பார்கள். அந்த இடத்தில் வீசும் பந்துகளில் கவனத்துடன் விளையாடினால் உங்களுக்கு ரன்கள் கண்டிப்பாக வரும்” என்று கூறினார்.

Advertisement