நேரலையின் போது ஒரே ஒரு கேள்வியால் இங்கிலாந்து வர்ணனையாளரை திகைக்க வைத்த – சுனில் கவாஸ்கர்

Gavaskar
Advertisement

இந்தியாவில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் போட்டி போட்டு தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சிறப்பான பொழுதுபோக்குடன் இந்த போட்டிகளானது நடைபெற்று வருகின்றன. இதுவரை 20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று 21 ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.

IPL Umpires

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி எந்த அளவிற்கு பரபரப்பாக சென்றதோ அதே அளவு வர்ணனையும் பரபரப்பை கூட்டியது என்று சொல்லலாம். ஏனெனில் ஐபிஎல் போட்டிகளை வர்ணனை செய்து வரும் சுனில் கவாஸ்கர் எப்பொழுதுமே கிரிக்கெட் உடன் சில நகைச்சுவையான விடயங்களையும் சேர்த்து பேசுவதில் வல்லவர்.

- Advertisement -

அந்தவகையில் நேற்றைய போட்டியின் போது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆலன் வில்கின்சன் சேர்ந்து வர்ணனை செய்த சுனில் கவாஸ்கர் போட்டியின்போது முக்கிய விடயங்களைப் பற்றியும் பேசியது மட்டுமின்றி ரசிகர்களை கவரும் விதமாக அவரிடம் ஒரு முக்கியமான கேள்வி ஒன்றையும் முன் வைத்தார்.

tw

அதன்படி சுனில் கவாஸ்கர் கூறியதாவது : இந்தியாவில் எங்களிடம் இருந்து எடுத்துச் சென்ற அந்த கோஹினூர் வைரத்தை எப்போது தருவீர்கள்? நாங்கள் அதற்காக காத்திருக்கிறோம் என்று நகைச்சுவையாக தெரிவித்தார். இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத ஆலன் சற்று திகைத்து விட்டார் என்றே கூறலாம்.

- Advertisement -

இருப்பினும் அதனை சமாளித்து விட்டு சிரித்தபடியே “அது எப்போது திரும்பி வரும் என்பதை காண நானும் ஆச்சரியத்துடன் தான் உள்ளேன்” என்று தெரிவித்தார். இதை அடுத்து சுனில் கவாஸ்கர் ஏதேனும் செல்வாக்கு இருந்தால் நீங்கள் உங்கள் நாட்டு அதிகாரிகளிடமும், மகாராணியிடம் கேட்டு அந்த வைரத்தை பெற்று தாருங்கள் என்று நகைச்சுவையாக கூறினார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : நடந்தது 20 மேட்ச், அதற்குள் எத்தனை தவறுகள் தெரியுமா? மோசமான அம்பயர்களை கங்குலி கவனிப்பாரா?

இவர்கள் இருவரின் இந்த கலகலப்பான பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும் சுனில் கவாஸ்கர் கேட்ட கேள்வி சரியான ஒன்றுதான் என்றும் கோகினூர் வைரம் நமக்கு தேவை என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூகவலைதளத்தின் மூலம் முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement