இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதில் அவரை சேருங்க – சுனில் கவாஸ்கர் கருத்து

Gavaskar
- Advertisement -

பெர்த் நகரில் கடந்த நவம்பர் 22-ஆம் தேதி துவங்கி நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரை தாண்டி தமிழக இளம் ஆல்ரவுண்டான வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பில் அந்த மைதானத்தில் எந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட முடியுமோ அந்த அளவிற்கு சிறப்பான செயல்பாட்டை வாஷிங்டன் சுந்தர் வெளிப்படுத்தி அசத்தினார்.

சுந்தருக்கு பதிலாக அவரை டீம்ல சேருங்க :

இந்திய டெஸ்ட் அணியில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கம்பேக் கொடுத்துள்ள அவர் தொடர்ச்சியாக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதால் அவரை எதிர்கால நட்சத்திரமாக மாற்றும் முயற்சியில் நிர்வாகமும் அவருக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வாய்ப்புகளை கொடுத்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் அடிலெய்டு நகரில் நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தயாராகியுள்ளதால் நேரடியாக அவர்கள் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார்கள். இதன் காரணமாக படிக்கல் மற்றும் ஜுரேல் ஆகியோர் வெளியேறுவார்கள்.

- Advertisement -

அவர்களுக்கு பதிலாக ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோர் இடம் பெறுவார்கள். அதேபோன்று ரோகித் சர்மா துவக்க வீரராகவும், சுப்மன் கில் மூன்றாவது வீரராகவும் களமிறங்குவார்கள் என்று நான் நினைக்கிறேன். இதனால் கே.எல் ராகுல் ஆறாவது இடத்திற்கு மீண்டும் செல்வார். முதல் போட்டியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா கொண்டுவரப்பட வேண்டும்.

இதையும் படிங்க : அஷ்வின், ஜடேஜாவை நெனைச்சா ரொம்ப பெருமையா இருக்கு.. ரொம்ப நல்ல குணம் – அபிஷேக் நாயர் பாராட்டு

ஏனெனில் அடிலெய்டு டெஸ்ட் பகலிரவு போட்டி என்பதனால் அந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு அனுபவம் உள்ளது. எனவே அவர் அணியில் சரியான பேலன்ஸை கொடுப்பார் என்பதனால் வாஷிங்டன் சுந்தர் இரண்டாவது போட்டியில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜடேஜாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தான் கருதுவதாக கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement