ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி பெர்த் நகரில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் குணம் :
இந்த தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பிளேயிங் லெவனில் இளம் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் பொதுவாக ஒரு சுழற்பந்து வீச்சாளரை வைத்து இந்திய அணி விளையாடினாலும் அது ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய இருவரில் ஒருவாகத்தான் இருக்கும். ஆனால் தற்போது அனுபவ வீரர்களான அவர்கள் இருவரையும் தவிர்த்து வாஷிங்டன் சுந்தருடன் இந்திய அணி களமிறங்கியது பெருமளவில் பேசு பொருளாக மாறியது.
ஆனால் தாங்கள் அணியில் இடம்பெறவில்லை என்றாலும் இளம் வீரர்களை எவ்வாறு ஊக்குவிக்க வேண்டும் என்பதை பெரிய மனதுடன் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் செய்து வருவதாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
இந்திய அணியை பொறுத்தவரை வெற்றி மட்டும் தான் ஒரே இலக்கு. இங்கு வீரர்களுக்குள் பாகுபாடு என்ற பிரிவினை எல்லாம் கிடையாது. அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் முதல் போட்டிகள் விளையாடவில்லை என்றாலும் வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்கள். அதோடு குறிப்பாக இளம் வீரர்களுக்கு அவர்களுடைய அனுபவத்தை பகிர்ந்து எவ்வாறு சூழலை கணிக்க வேண்டும், எப்படி போட்டியின் சூழலுக்கு ஏற்ப விளையாட வேண்டும் என்பது குறித்த பல்வேறு அனுபவங்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்தனர்.
இதையும் படிங்க : நான் சொல்றேன்.. இப்போ இங்கிலாந்தை விட இந்தியா தான் அதுல பெஸ்ட்.. ஆஸி பிரதமர் பதிலடி
இதனை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது .அனுபவ வீரர்களான அவர்கள் இருவரும் இப்படி அடுத்த தலைமுறை வீரர்களை வளர்ப்பது மிகச் சிறப்பான குணம் என அபிஷேக் சர்மா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.