நான் சொல்றேன்.. இப்போ இங்கிலாந்தை விட இந்தியா தான் அதுல பெஸ்ட்.. ஆஸி பிரதமர் பதிலடி

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் சந்தித்த தோல்வியிலிருந்து இந்தியா கம்பேக் கொடுத்தது.

அத்துடன் தோல்வியை சந்திக்கும் என்று கணித்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்தியா பதிலடியும் கொடுத்தது. இதை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் நகரில் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. அதற்கு முன்பாக ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் பயிற்சி போட்டி கான்பெரா நகரில் நவம்பர் 30ஆம் தேதி துவங்கியது.

- Advertisement -

பிரதமர் கருத்து:

அந்தப் போட்டியின் துவக்கத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பென்ஸி கலந்து கொண்டார். அப்போது ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஆசஸ் தொடரை விட ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதும் பார்டர் – காவாஸ்கர் கோப்பை போட்டி மிகுந்தது என்று அல்பன்சி கூறினார். இது பற்றி ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

“அது தற்போது போட்டி மிகுந்ததாக இருக்கிறது என்று நினைக்கிறேன். மக்கள் தொகை அடிப்படையில் ஐபிஎல் தற்போது உலக கிரிக்கெட்டின் பெரிய அங்கமாக இருக்கிறது. அகமதாபாத் நகரில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டியில் நானும் பிரதமர் மோடியும் இருந்தோம். அங்கே ரசிகர்கள் ஏராளமானவர்கள் இருந்தார்கள். அந்த மைதானம் உலகில் பெரியது”

- Advertisement -

மைக்கேல் வாகனுக்கு பதிலடி

“அவர்கள் கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வம் இருந்தவர்கள். அதே சமயம் கடந்த வருடம் லண்டனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அவர்களுக்கு எதிராக நாங்கள் விளையாடி வெற்றி கொண்டோம். ஆனால் இந்த தொடரில் உண்மையான போட்டி இருக்கிறது. கடந்த காலங்களில் அது 3 போட்டிகள் கொண்ட தொடராக இருக்கிறது. டிசம்பர் 26ஆம் தேதி நடைபெறும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் நீங்கள் 100,000 ரசிகர்களை பார்க்கக்கூடும்”

இதையும் படிங்க: முதல் நியூசிலாந்து வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்திய கேன் வில்லியம்சன் – வரலாற்று சாதனை விவரம் இதோ

“அது ஆஸ்திரேலிய சுற்றுலாவுக்கும் மிகவும் சிறந்தது” என்று கூறினார். முன்னதாக என்ன தான் சொன்னாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடும் நூற்றாண்டு சிறப்புமிக்க ஆசஸ் தொடர் தான் சிறந்தது என்று சமீபத்தில் மைக்கேல் வாகன் தெரிவித்திருந்தார். அவருடைய கருத்துக்கு பதிலடி தெரிவிக்கும் வகையில் ஆஸ்திரேலிய பிரதமரின் இந்த கருத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement