பேசி சம்மதிக்க வைங்க.. ஆஸியை வீழ்த்தி அந்த உ.கோ ஜெய்க்க பாண்டியா தேவை.. கவாஸ்கர் கோரிக்கை

Sunil Gavaskar 5
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றது. அத்தொடரில் ரோகித் சர்மா தலைமையில எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா தோல்வியே சந்திக்காமல் 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வெற்றிக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட அனைவருமே முக்கிய பங்காற்றினர்.

அதே போல ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டராக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார். குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் காயமடைந்து வெளியேறிய அவர் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார். அதனால் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் பணத்துக்காக மட்டுமே விளையாடுவார் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

- Advertisement -

கவாஸ்கர் கோரிக்கை:
அதே போல 2024 ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதனால் மும்பை ரசிகர்களே பாண்டியாவை கடுமையாக கிண்டலடித்து விமர்சித்தனர். இருப்பினும் அதற்கெல்லாம் அசராத பாண்டியா இந்த உலகக் கோப்பையில் 11 விக்கெட்டுகள் மற்றும் 144 ரன்கள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

குறிப்பாக மாபெரும் இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் டேவிட் மில்லரை அவுட்டாக்கிய அவர் 16 ரன்களை கட்டுப்படுத்தி இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். அதனால் ஆனந்தக் கண்ணீர் விட்ட பாண்டியா தாம் நாட்டுக்காகவும் விளையாடுவேன் என்பதை நிரூபித்து ரசிகர்களின் மனதை தொட்டார். இந்நிலையில் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டுமென சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

எனவே பாண்டியா அதை செய்தால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்தியா எளிதில் வீழ்த்த முடியாத அணியாக உருவெடுக்கும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். குறிப்பாக வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் 2024/25 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை இந்தியா வெல்வதற்கு பாண்டிய அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: எல்லாரும் சமம் தான்.. அவங்கள விட நான் பெருசில்ல.. பிசிசிஐ கொடுத்த போனஸை வாங்க மறுத்த ராகுல் ட்ராவிட்

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அடுத்த 2 – 3 மாதங்களில் ஹர்திக் பாண்டியாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைக்க இந்திய அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று நினைக்கிறேன். அவர் ஒரு நாளில் 10 ஓவர்கள் வீசி பேட்டிங்கில் முக்கிய ரன்களை எடுத்தால் இந்திய அணி எதிரணிகளால் எளிதாக வெல்ல முடியாத அணியாக உருவெடுக்கும். அப்படியே ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையும் இந்திய அணியால் வெல்ல முடியும்” என்று கூறினார்.

Advertisement