எல்லாரும் சமம் தான்.. அவங்கள விட நான் பெருசில்ல.. பிசிசிஐ கொடுத்த போனஸை வாங்க மறுத்த ராகுல் ட்ராவிட்

Rahul Dravid
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றது ரசிகர்களுக்கு மறக்க முடியாத நினைவாக அமைந்தது. அந்தத் தொடருடன் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதே போல ஜாம்பவான் ராகுல் டிராவிட்டும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடை பெற்றார்.

முன்னதாக 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்றதன் காரணமாக இந்திய அணிக்கு 125 கோடி என்ற பிரம்மாண்ட தொகையை பிசிசிஐ பரிசாக அறிவித்தது. சொல்லப்போனால் ஐசிசி வெறும் 20.58 கோடி மட்டுமே பரிசாக கொடுத்த நிலையில் பிசிசிஐ இவ்வளவு பெரிய தொகையை பரிசாக அறிவித்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

- Advertisement -

மறுத்த டிராவிட்:
அந்த நிலையில் 125 கோடி ரூபாயில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும் என்ற விவரம் சமீபத்தில் வெளியானது. அதன் படி ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முதன்மை அணியில் இருந்த 15 வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசாக கிடைக்கும். அதே போல ரிங்கு சிங், கில் ஆகிய ரிசர்வ் வீரர்களுக்கு தலா 1 கோடி ரூபாய் பரிசாக கொடுக்கப்படும் என்று தெரிய வந்தது.

அதே சமயம் விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு நிகராக தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 5 கோடி ரூபாய் பரிசாக ஒதுக்கப்பட்டது. ஆனால் விக்ரம் ரத்தோர், டி திலிப், பராஸ் மாம்ப்ரே ஆகிய துணைப் பயிற்சியாளர்களுக்கு தலா 2.5 கோடி ரூபாய் மட்டுமே பரிசாக ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் மற்ற பயிற்சியாளர்களைப் போலவே தமக்கும் 2.5 கோடி போதும் என்று ராகுல் டிராவிட் சொல்லி விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

- Advertisement -

குறிப்பாக வீரர்கள் தான் களத்தில் விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்ததாக கருதும் டிராவிட் மற்ற பயிற்சியாளர்களைப் போல தாமும் வேலை செய்ததாக கருதுகிறார். அத்துடன் தாம் மட்டும் பெரியவன் அல்ல என்று கருதும் அவர் துணை பயிற்சியாளர்களைப் போல தமக்கும் சமமான பரிசு கிடைத்தால் போதும் என்று பிசிசிஐ’யிடம் சொல்லி விட்டதாக தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: இப்படி ஒரு பொறுப்போடு வந்ததில் மகிழ்ச்சி.. புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு – கம்பீர் வெளியிட்ட பதிவு

இது பற்றி பிசிசிஐ நிர்வாகி கூறியது பின்வருமாறு. “மற்ற துணைப் பயிற்சியாளர்களைப் போலவே ராகுல் டிராவிட் அதே போனஸ் (2.5 கோடி) தொகையை வேண்டும் என்று சொல்லி விட்டார். எனவே நாங்கள் அவருடைய சென்டிமெண்டை மதிக்கிறோம்” என்று கூறினார். அந்த வகையில் எக்ஸ்ட்ரா போனஸ் 2.5 கோடியை வேண்டாம் என்று சொன்ன ராகுல் டிராவிட்டின் மனதை ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

Advertisement