இப்படி ஒரு பொறுப்போடு வந்ததில் மகிழ்ச்சி.. புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு – கம்பீர் வெளியிட்ட பதிவு

Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. அதனை தொடர்ந்து தான் தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவழிக்க விரும்புவதாக டிராவிட் தெரிவித்ததால் மீண்டும் பி.சி.சி.ஐ அவரை பயிற்சியாளராக தொடர கட்டாயப்படுத்தவில்லை என்று கூறியிருந்தது.

அதனை தொடர்ந்து ஏற்கனவே நடைபெற்று வந்த புதிய பயிற்சியாளருக்கான தேடலில் கவுதம் கம்பீர் மற்றும் டபிள்யூ.வி ராமன் ஆகியோரை இறுதியாக மும்பை அழைத்திருந்த பி.சி.சி.ஐ-யானது அவர்களிடம் இறுதிக்கட்ட நேர்காணல் செய்திருந்தது.

- Advertisement -

இருப்பினும் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் மென்டராக அந்த அணிக்கு கோப்பையை கைப்பற்றித்தந்ததன் அடிப்படையில் புதிய பயிற்சியாளராக கம்பீர் தான் அறிவிக்கப்படுவார் என்று பல வாரங்களாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று பி.சி.சி.ஐ செயலாளரான ஜெய் ஷா இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீரை அதிகபூர்வமாக அடுத்த பயிற்சியாளராக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளராக பொறுப்பு ஏற்பது குறித்து கௌதம் கம்பீர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதில் அவர் குறிப்பிட்டதாவது : எனது அடையாளம் எனது நாட்டிற்கு சேவை செய்வது, இந்த பயிற்சியாளர் பொறுப்பு என்பது எனக்கு மிகப் பெரிய பாக்கியம் ஆகும். இவ்வளவு பெரிய பொறுப்புடன் நான் இந்திய அணிக்குள் வருவது பெருமை கொள்கிறேன்.

இதையும் படிங்க : ரோஹித், கோலி மாதிரி ஜாம்பவான்களே அழுத அப்போ கூட நான் அழாம இருந்ததுக்கு காரணம் இதுதான் – அர்ஷ்தீப் சிங்

140 கோடி மக்கள் கனவுகளை சுமக்கும் வீரர்களை நான் பயிற்றுவிக்க இருப்பது பெருமை என்னால் முடிந்த அனைத்தையும் அணிக்காக வழங்கி நம் ஒவ்வொருவரின் ஆசையையும், கனவையும் வெற்றிகளின் மூலம் வெளிக்கொணர்வேன் என்று கவுதம் கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement