அண்மையில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரினை கைப்பற்றிய இந்திய அணியானது 2007-ஆம் ஆண்டில் தோனியின் தலைமையில் பெற்ற வெற்றிக்கு பிறகு தற்போது 17 ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த வெற்றி இந்தியா முழுவதிலும் உள்ள ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே ஐசிசி கோப்பையை மிக நெருக்கமாக சென்று தவறவிட்டு வரும் இந்திய அணியானது இறுதியாக இம்முறை மிகச் சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியையே சந்திக்காமல் இறுதிவரை சென்று கோப்பையை தட்டி தூக்கியது.
இந்த டி20 உலககோப்பை வெற்றிக்கு பின்னர் உணர்ச்சி மிகுதியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹார்டிக் பாண்டியா மற்றும் பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் பலரும் வெற்றியை நினைத்து மைதானத்திலேயே அழுதார்கள். மேலும் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் இந்த வெற்றியை கண்ணீர் விட்டு கொண்டாடியிருந்தனர்.
இந்நிலையில் இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் இப்படி கண் கலங்கி இருந்தபோது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் வெற்றியை கொண்டாடினாரே தவிர, அழவில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இறுதி போட்டியின் போது ஹார்டிக் பாண்டியா பந்துவீச்சில் டேவிட் மில்லர் அடித்த பந்தை நான் சரியான நேரத்தில் நின்று பார்த்தேன்.
பந்து சிக்ஸருக்கு சென்று விடும் என்று தான் நினைத்தேன். அந்த நேரத்தில் எனக்கு இதயமே நின்றுவிடும் போல் இருந்தது. ஆனால் சூரியகுமார் யாதவ் அதனை தடுக்க நினைக்காமல் பிடித்து விட்டார். இந்த வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. இறுதிப் போட்டி என்பது ஒரு அழுத்தம் நிறைந்த போட்டி தான் ஆனால் எந்த ஒரு போட்டியையும் புதிய போட்டியாகவே பார்க்க வேண்டும் என்று ரோஹித் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : டிஎன்பிஎல் 2024 : 126 ரன்ஸ் மெகா பார்ட்னர்ஷிப்.. வலுவான மதுரையை சாய்த்த திருச்சி.. புள்ளிப்பட்டியலில் அதிரடி
இதேபோன்று பல்வேறு இறுக்கமான போட்டிகளை நான் சந்தித்து இருக்கிறேன். அதனால் தான் என்னவோ இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதற்கு அடுத்து அழுகை மட்டும் வரவே இல்லை. வெற்றிக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது என அர்ஷ்தீப் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.