58 கோடி பரிசு.. 2024 டி20 உ.கோ தங்கம் டிராவிட் மாதிரி கம்பீர் சுயநலமின்றி இதை செய்ய முடியுமா? கவாஸ்கர் 

Sunil Gavaskar
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரை ரோஹித் சர்மா தலைமையில் வென்று இந்தியா சாதனை படைத்தது. 2024 டி20 உலகக் கோப்பையையும் வென்ற இந்தியா கடந்த 10 மாதங்களில் 2 ஐசிசி கோப்பைகளை வென்று ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அந்த உற்சாகத்தால் மகிழ்ச்சியடைந்த பிசிசிஐ சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு 58 கோடி பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தது.

சொல்லப்போனால் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐசிசி 20 கோடி மட்டுமே கொடுத்தது. ஆனால் பிசிசிஐ சுமார் 3 மடங்கு அதிகம் பரிசு கொடுத்துள்ளது. இது போக ஏற்கனவே 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி என்ற பிரம்மாண்ட தொகையையும் பிசிசிஐ பரிசாக கொடுத்திருந்தது. 11 வருடம் கழித்து அந்த ஐசிசி கோப்பையை வெல்ல உதவிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு பிசிசிஐ 2.5 கோடி ஸ்பெஷல் பரிசுத் தொகையும் கொடுத்தது.

- Advertisement -

தங்கமான ட்ராவிட்:

ஆனால் தங்கமான மனதுடன் ராகுல் டிராவிட் ஏற்க மறுத்து விட்டார். மேலும் துணைப் பயிற்சியாளர்களுக்கு என்ன பரிசுத்தொகை கொடுக்கப்படுகிறதோ அதையே தமக்கும் கொடுங்கள் என்று ராகுல் டிராவிட் சொல்லி விட்டார். அது போக தமக்குக் கிடைத்த 2.5 கோடி பரிசுத் தொகையை டிராவிட் துணைப் பயிற்சியாளர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார்.

அப்படிப்பட்ட நிலையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதற்காக தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு பிசிசிஐ 3 கோடி பரிசுக் கொடுத்துள்ளது. ஆனால் மோர்னே மோர்கெல், டி திலிப் உள்ளிட்ட துணைப் பயிற்சியாளர்களுக்கு 50 லட்சம் மட்டுமே பரிசாகக் கொடுத்துள்ளது. இந்நிலையில் தற்போது ராகுல் டிராவிட் போல கௌதம் கம்பீரால் சுயநலமின்றி இருக்க முடியுமா? என்று சுனில் கவாஸ்கர் கேட்டுக் கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisement -

கவாஸ்கர் கேள்வி:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2024 டி20 உலகக் கோப்பை வென்றதும் நமது வாரியம் பரிசுத்தொகையை அறிவித்தது. அப்போது தனது சக பயிற்சியாளர்களை விட அதிக தொகையைப் பெறுவதற்கு அணியின் மனிதர் ராகுல் டிராவிட் மறுத்து விட்டார். சொல்லப்போனால் அவர் தனது பரிசை சமமாக துணைப் பயிற்சியாளர்களுக்கு பிரித்துக் கொடுத்தார்”

இதையும் படிங்க: அது என் இஷ்டம்.. அதுவரை மாறாது.. ரஹானே வைத்த கோரிக்கையை நிரகாரித்த கொல்கத்தா க்யூரேட்டர்

“அதே போல சாம்பியன்ஸ் டிராபி வென்றதற்காக பிசிசிஐ பரிசு கொடுத்துள்ளது. ஆனால் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் போல எந்த அறிவிப்பும் வெளியிட்டதாக கேட்க முடியவில்லை. அப்படியானால் ராகுல் டிராவிட் நல்ல ரோல் மாடலாக இல்லையா?” என்று கூறினார். மேலும் தற்போது உலகின் பணக்கார வாரியமாக இருக்கும் பிசிசிஐ ஐசிசி கோப்பையை வெல்லும் தங்களது அணிக்கு இப்படி பெரிய பரிசுத் தொகைகளை கொடுப்பதை கவாஸ்கர் வரவேற்றுள்ளார்.

Advertisement