சுத்துற பிளேயர்ஸ் இந்தியாவுக்கு வேண்டாம்.. இதை செய்ங்க இல்லனா கழற்றி விடுங்க.. பிசிசிஐயை சாடிய கவாஸ்கர்

Sunil Gavaskar 3
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணிலும் தோல்வியை சந்தித்த இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. அந்தத் தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்களின் சுமாரான ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்களை நட்சத்திரங்களாக கருதி பிசிசிஐ சலுகைகளை அள்ளிக் கொடுப்பதாக சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். அதை பயன்படுத்தி விராட் கோலி போன்றவர் இந்தியாவுக்கு விளையாடாத சமயங்களில் லண்டனுக்கு செல்வதாகவும் அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். அங்கிருந்து பயிற்சிகளை எடுக்காமல் உள்ளூரிலும் விளையாடாமல் களமிறங்குவதே அவர்கள் தடுமாற காரணம் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார்.

- Advertisement -

கவாஸ்கர் விளாசல்:

எனவே பிசிசிஐ இவை அனைத்திற்கும் அடுத்த 10 நாட்களுக்குள் முடிவு கட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அடுத்த 8 – 10 நாட்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். அது உண்மையுடன் தன்னை பார்க்க வேண்டும். குறிப்பாக நட்சத்திர கலாச்சாரம் முடிவுக்கு வருவது தற்போது முக்கியம்”

“இந்திய கிரிக்கெட்டுக்கான ஈடுபாடு தவிர்க்க முடியாததாக இருக்க வேண்டும். மருத்துவ காரணங்களை தவிர்த்து அனைத்து வீரர்களும் ஒவ்வொரு முறையும் விளையாட தயாராக இருக்க வேண்டும். ஒருவேளை இந்தியாவுக்காக விளையாட யாராவது ஈடுபாட்டுடன் இல்லை என்றால் அவர்கள் தேர்வுக்கு தகுந்தவர்களாக இருக்கக்கூடாது. பாதி இங்கேயும் பாதி எங்கேயோ இருக்கக்கூடிய வீரர்கள் இந்தியாவுக்கு தேவை இல்லை”

- Advertisement -

பிசிசிஐ களமிறங்கனும்:

“வீரர்களை தடவிக் கொடுப்பதை நிறுத்த வேண்டிய நேரம் இதுவாகும். சமீபத்திய முடிவுகள் சுமாராக இருந்ததால் நம்மால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியவில்லை. ஆனால் நாம் அதற்கு தகுதி பெற்றிருக்க வேண்டும். எனவே இது நம்முடைய வாரியம் ரசிகர்களைப் போல் நடிப்பதை விட்டுவிட்டு காலை வைக்க வேண்டிய நேரமாகும்”

இதையும் படிங்க: அப்படி நடந்தா சோகமாகிடுவேன்.. ரன்களை தாண்டி விராட் கோலியின் தியேட்டர் கடினமானது.. கமின்ஸ் பாராட்டு

“அவர்கள் நம்முடைய வீரர்களிடம் இந்திய கிரிக்கெட் தான் முதல் விஷயம் என்று சொல்ல வேண்டும். எனவே இந்திய கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் வீரர்களை மட்டுமே நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பிசிசிஐ கண்டிப்பாக இந்திய அணியில் மாற்றங்களை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement