IND vs WI : இதுல பாராட்ட என்ன இருக்கு? வரலாற்று சாதனைகளை படைத்த விராட் – ரோஹித் மீது கவாஸ்கர் அதிருப்தி, காரணம் இதோ

Sunil Gavaskar 3
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. இருப்பினும் ட்ரினிடாட் நகரில் ஜூலை 20ஆம் தேதி துவங்கிய 2வது போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 438 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸை 255 ரன்களுக்கு கட்டுப்படுத்தி பின்னர் 181/2 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இறுதியில் 365 ரன்கள் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் 76/2 என தடுமாறியதால் வெற்றி பிரகாசமான போதிலும் மழை வந்து ட்ராவில் முடிந்ததால் 1 – 0 (2) இந்தியா கோப்பை வென்றது.

Kohli wi keeper

- Advertisement -

இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த முகமது சிராஜ் ஆட்டநாயக்கன் விருது வென்றாலும் தன்னுடைய 500வது போட்டியில் அரை சதம் மற்றும் சதமடித்த முதல் வீரர் ஆகிய இரட்டை உலக சாதனைகளை படைத்த விராட் கோலி 121 ரன்கள் எடுத்து சிறப்பாக செயல்பட்டு ஏராளமான சாதனைகளை படைத்தார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் பலவீனமான அணியாகவே இருந்தாலும் 182/4 என லேசாக இந்தியா தடுமாறிய போது நங்கூரமாக நின்று பேட்டிங் செய்து சதமடித்த அவர் முதல் போட்டியிலும் அதிக பந்துகளை எதிர்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நிகரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கவாஸ்கர் அதிருப்தி:
அதே போல கேப்டன் ரோகித் சர்மாவும் முதல் போட்டியில் சதமடித்து 2வது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி நிறைய சாதனைகளை படைத்து அசத்தினார். இந்நிலையில் பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வருங்காலத்தை வளமாக்குப் போகும் இளம் வீரர்கள் விளையாடியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர் இப்படி சீனியர்கள் விளையாடி சாதனை படைப்பதில் என்ன பயன் என்று பாராட்டுவதற்கு பதில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி மிட் டே பத்திரிகையில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ரோஹித் மற்றும் விராட் ஆகியோர் அடித்துள்ள ரன்கள் தேர்வுக்குழுவினர் ஏற்கனவே சந்தித்த தோல்விகளிலிருந்து என்ன பாடத்தை கற்றார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. இது போன்ற தொடர்களில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வாறு அசத்துகிறார்கள் என்பதை பார்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அந்த நிலையில் முதல் போட்டியில் மிகவும் மெதுவாக விளையாடிய விராட் கோலி 2வது போட்டியில் நிச்சயமாக சதத்தை தவற விட மாட்டார்”

- Advertisement -

“அவருடைய இன்னிங்ஸ் திறமையால் மட்டும் வரவில்லை. மாறாக பிட்ச் மற்றும் கால சூழ்நிலை உணர்ந்து எதிரணியின் பலத்தை தெரிந்து அதற்கேற்றார் போல் பெரிய ரன்களை குவித்தார். பொதுவாக ஒரு பேட்ஸ்மேனனுக்கு 2 – 3 ஆபத்தான விஷயங்கள் இருக்கும். குறிப்பாக பிட்ச் எப்படி இருக்கும் அதற்கேற்றார் போல் நம்முடைய ஃபுட் ஒர்க்கை எப்படி மாற்றலாம் என்பது முதல் சவாலாகும். அடுத்தது அரை சதம் கடந்த பின் சக வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுக்களால் கவனத்தை இழக்காமல் இருக்க வேண்டியது 2வது சவாலாகும்”

“3வது 90 ரன்களை கடந்ததும் சதத்தை விரைவாக தொட வேண்டும் என்பதற்காக தேவையற்ற ஷாட்டை அடித்து அவுட்டாவதாகும். இதையும் தாண்டி சதத்தை தொட்டு சாதனை படைத்த பின் மகிழ்ச்சியாக இருக்க நினைக்கும் போது கவனம் சிதறி விடும் என்பது மற்றொரு சவாலாகும். அது போன்ற சமயங்களில் சதத்தை தொட்டதும் 2 – 3 ஓவர்கள் அதிக பந்துகளை எதிர்கொள்ளாமல் எதிர்ப்புறத்தில் நின்று கொண்டால் கவனத்தை சிதற விடாமல் இருக்கலாம். இவை அனைத்துமே விராட் கோலிக்கு தெரியும். அதை இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக கையாண்ட அவர் சதத்தை தவற விடவில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க:கடைசி நேரத்தில் பிரான்சிஸ்கோவை நொறுக்கி வெற்றியை பறித்த டேனியல் சாம்ஸ் – சூப்பர் கிங்ஸ் பிளே சென்றதா?

முன்னதாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் படுதோல்வியை சந்தித்த இந்தியாவுக்கு இந்த தொடரில் இளம் வீரர்கள் தேர்வு செய்யப்படாததால் ஏமாற்றமடைந்த கவாஸ்கர் பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணியை அடித்து நொறுக்கி ஒய்ட் வாஷ் வெற்றியையும் சாதனையும் படைத்து வாருங்கள் என்று ஆரம்பத்திலேயே கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement