தேவையில்லாத ரெஸ்ட் எதுக்கு.. இதனால கஷ்டப்பட போறது அவங்க தான்.. ஜெய் ஷா மீது கவாஸ்கர் அதிருப்தி

Sunil Gavaskar
- Advertisement -

இந்தியாவில் துலீப் கோப்பை 2024 உள்ளூர் தொடர் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி பெங்களூரு நகரில் துவங்குகிறது. மொத்தம் 4 அணிகள் விளையாடும் அந்தத் தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு மட்டும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், ருதுராஜ், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் பெரும்பாலான இந்திய வீரர்கள் அத்தொடரில் விளையாட உள்ளனர்.

முன்னதாக அந்தத் தொடரில் கௌதம் கம்பீர் பரிந்துரைப்படி விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடுவார்கள் என்று செய்திகள் வெளியாகின. குறிப்பாக புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் ஃபிட்டாக இருக்கும் அனைவரும் தொடர்ந்து விளையாட வேண்டும் என்ற கோட்பாட்டை கொண்டுள்ளார். எனவே தனித்துவமான பும்ராவுக்கு மட்டும் ஓய்வு கொடுத்த அவர் சமீபத்திய இலங்கை ஒருநாள் தொடரில் விராட், ரோஹித்தை வலுக்கட்டாயமாக விளையாட வைத்தார்.

- Advertisement -

கவாஸ்கர் விமர்சனம்:
அதே போல துலீப் கோப்பையிலும் விராட், ரோஹித் விளையாடுவார்கள் என்று ஆரம்பத்தில் செய்திகள் வெளியானது. ஆனால் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. எனவே நிறைய அனுபவத்தை கொண்டுள்ள விராட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு கொடுப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கடைசி நேரத்தில் அறிவித்தார்.

அத்துடன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போல இந்தியாவும் தங்களுடைய டாப் வீரர்களை மரியாதையுடன் நடத்துவதாகவும் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறும் டெஸ்ட் தொடரில் விராட், ரோஹித் நேரடியாக களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு துலீப் கோப்பையில் கொடுத்தது அவர்களுக்குத்தான் சிரமத்தை ஏற்படுத்தும் என சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தேர்வாளர்கள் விராட் மற்றும் ரோஹித்தை துலீப் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கவில்லை. அதனால் அவர்கள் வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பயிற்சி எடுக்காமலேயே களமிறங்குவார்கள். ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற ஒருவரின் மென்மையான முதுகில் கவனம் கையாளப்பட வேண்டும் என்பது புரிந்து கொள்ளத்தக்கது”

இதையும் படிங்க: விராட் கோலிக்கு முன்னதாகவே தோனி அந்த விடயத்தில் கடுமையாக இருந்தார் – ஆர்.ஸ்ரீதர் பகிர்ந்த தகவல்

“ஆனால் பேட்ஸ்மேன்கள் களத்தில் கொஞ்சம் பேட்டிங் செய்வது நன்றாக இருக்கும். ஏனெனில் எந்த விளையாட்டிலும் வீரர்கள் 35 வயதை கடந்து விட்டால் தொடர்ச்சியாக விளையாடுவது தங்களது தரத்தை உயர்தரமாக வைத்துக் கொள்ள உதவும். ஆனால் ஒரு நீண்ட இடைவெளி இருக்கும் போது தசைகள் ஓரளவு பலவீனமடையும். அதனால் முந்தைய உயர்தரத்திற்கு திரும்புவது எளிதானதல்ல” என்று கூறினார்.

Advertisement