உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு அவரை மட்டும் கூட்டினு போவாதீங்க – சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை

Gavaskar
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் போட்டிகளில் சுவாரசியத்தை மீண்டும் வெளிக்கொணரும் விதமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இந்நிலையில் அதனை தொடர்ந்து இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது வரும் ஜூன் மாதம் 7-ஆம் தேதி லண்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

IND vs AUS

இந்த இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கின்றன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய வேளையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பினை உறுதி செய்தது.

- Advertisement -

அதோடு ஏற்கனவே மூன்றாவது போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக தகுதி பெற்றதால் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் மோதவுள்ளது. இந்நிலையில் இறுதி போட்டியில் இங்கிலாந்தில் விளையாடவுள்ள இந்திய அணிக்கு ஒரு எச்சரிக்கையை முன்னாள் வீரரான கவாஸ்கர் விடுத்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

KS-Bharat

இந்திய அணில் அணியில் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இல்லாதது நமக்கு பெரும் பின்னடைவு தான். ஏனெனில் இந்திய மைதானங்களில் சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து நாம் சமாளித்து விடலாம். ஆனால் இங்கிலாந்து போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் அவரைப் போன்ற ஒரு திறமையான வீரர் வேண்டும்.

- Advertisement -

அதேபோன்று ரிஷப் பண்டிற்கு பதிலாக நல்ல ஒரு விக்கெட் கீப்பர் தேவை. தற்போது உள்ள கே.எஸ் பரத்தின் விக்கெட் கீப்பிங் சற்று மோசமாகவே உள்ளது. பந்து மிஸ் ஆகி ஸ்டம்பில் அடிக்கும்போது அவரது கைகள் ஸ்டம்பின் அருகில் கூட இல்லை. இப்படி இருக்கையில் அவரை இங்கிலாந்துக்கு கொண்டு சென்று ரிஸ்க் எடுக்கக் கூடாது. அவருக்கு பதிலாக கே.எல் ராகுலை நாம் பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க : வீடியோ : முகமது ஷமிக்கு எதிராக கோஷமிட்ட இந்திய ரசிகர்கள் – ரோஹித் கொடுத்த பதில் என்ன தெரியுமா?

ஏனெனில் துவக்க வீரராக சுப்மன் கில் களமிறங்கும் போது கே.எல் ராகுல் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் களமிறங்கினால் இந்திய அணியின் பேட்டிங் ஆழமும் அதிகரிக்கும். எனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் கே.எல் ராகுல் நிச்சயம் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்றும் கே.எஸ் பரத்தை அணியில் தேர்வு செய்யக்கூடாது என்றும் கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement