விராட் கோலி விடயத்தில் கம்பீர் செய்தது எனக்கு சுத்தமா பிடிக்கல.. நேரடியாக பதிலளித்த – சுனில் கவாஸ்கர்

Gambhir
- Advertisement -

கான்பூர் நகரில் செப்டம்பர் 27-ஆம் தேதி துவங்கிய இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது முதல் நாளில் வெறும் 34 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட வேளையில் பாதியிலேயே மழை காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னர் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதனை தொடர்ந்து போட்டியின் இரண்டாவது நாள் மற்றும் மூன்றாவது நாள் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் முடிவுக்கு வந்தது.

கம்பீரின் முடிவு சரியல்ல :

இதன் காரணமாக இந்த போட்டி சமனில் முடியவே அதிகப்படியான வாய்ப்பு இருந்தது. ஆனால் போட்டியின் நான்காம் நாளான நேற்று இந்திய அணியின் அதிரடியான ஆட்டம் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தற்போது உயிர் கொடுத்துள்ளது. இந்த போட்டியில் வங்கதேச அணி முதலில் விளையாடி 233 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 34.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து அசத்தியது. அதன் பின்னர் தற்போது ஐந்தாம் நாளான இன்று இரண்டாவது இன்னிங்சை விளையாடியா பங்களாதேஷ் அணி 146 ரன்களை மட்டுமே குவித்து அட்டமிழந்தது.

இதன் காரணமாக தற்போது 95 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணி முதல் இன்னிங்க்ஸை விளையாடுகையில் வழக்கமாக நான்காவது இடத்தில் விளையாடும் விராட் கோலிக்கு முன்னதாக ரிஷப் பண்ட் நான்காவது வீரராக விளையாடினார். ஆனாலும் வந்த வேகத்திலேயே 11 பந்துகளில் 9 ரன்களில் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

அதேவேளையில் ஐந்தாவது இடத்தில் வந்த விராட் கோலி 35 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 47 ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில் விராட் கோலியை நான்காவது இடத்திற்கு அனுப்பாமல் ரிஷப் பண்ட் அனுப்பப்பட்டது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியது. இது குறித்து கவாஸ்கரிடம் கேட்டபோது : நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இடத்தில் களமிறங்கி 9 ஆயிரம் ரன்களை எடுத்து இருக்கும் ஒரு ஹீரோவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

இதையும் படிங்க : அதுக்கு கூட காசு இல்ல.. வாய்ப்பை பாத்ததும் அம்மா அழுதாங்க.. கம்பீர் பையா சொன்னது நடந்துச்சு.. மயங் யாதவ்

அந்த இடத்தில் அவர்தான் (விராட் கோலி) விளையாடிருக்க வேண்டும். கம்பீரின் இந்த முடிவில் எனக்கு உடன்பாடு கிடையாது என நேரடியான பதிலை அளித்தார். இருப்பினும் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாட கூடியவர் என்பதனாலே போட்டியின் சூழல் கருதி அவரை முன்னர் அனுப்பிய கம்பீரின் முடிவு சரிதான் என்று சிலர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement