இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் மயங் யாதவ் முதல் முறையாக விளையாட தேர்வு வாங்கியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக அறிமுகமான அவர் 155கி.மீ வேகத்தில் தொடர்ச்சியாக பந்து வீசி தனது முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து ஆட்டநாயகன் விருதுகளை வென்று சாதனை படைத்தார்.
உம்ரான் மாலிக் போல அல்லாமல் நல்ல லைன், லென்த் ஆகியவற்றை பின்பற்றி அதிரடியாக பந்து வீசிய மயங் யாதவ் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் பாராட்டினார். ஆனால் அதன் பின் காயத்தை சந்தித்த அவர் சுமார் 6 மாதங்கள் கழித்து மீண்டும் குணமடைந்துள்ளார். அதனால் தற்போது இந்திய அணிக்காக விளையாட அவர் தேர்வாகியுள்ளார்.
ஸ்பான்சர் கிடைக்கல:
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தேர்வான பின்பும் போதுமான பணம் இல்லாமல் தம்முடைய காலணிகளுக்கு ஸ்பான்ஷர் கூட கிடைக்காமல் சிரமப்பட்டதாக மயங் யாதவ் கூறியுள்ளார். மேலும் இந்திய அணிக்காக தேர்வானதை பார்த்து தம்முடைய அம்மா ஆனந்தக் கண்ணீர் விட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்காக தேர்வானது எனக்கு தெரியவில்லை”
“ஆனால் என்னுடைய நண்பர்கள் வாழ்த்து செய்திகள் சொன்னதை பார்த்தேன். அப்போது தான் வேகமாக சென்று பிசிசிஐ இணையத்தில் பார்த்தேன். அங்கே என்னுடைய பெயர் இருந்தது. அந்த ஆச்சரியத்தில் என்னுடைய தொலைபேசியை கீழே போட்ட எனக்கு சோனட் கிளப்க்கு கிரிக்கெட்டில் விளையாட சென்ற முதல் நாள் முதல் என்சிஏவில் காயத்திலிருந்து குணமடைந்த நாட்கள் வரை கண் முன்னே வந்து சென்றது”
கெளதம் கம்பீர் ஆதரவு:
“பின்னர் உடனடியாக என்னுடைய அம்மாவுக்கு போன் செய்தேன். அவர் இந்தியாவுக்காக நான் தேர்வானதை நினைத்து கண்ணீருடன் என்னை பாராட்டினார். இங்கே தன்னை நிரூபிக்க பல வாய்ப்புகளை பெறும் வீரர்கள் இருப்பார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே ஒரே வாய்ப்பு கிடைக்கும் என்று கௌதம் கம்பீர் பையா என்னிடம் கூறியிருந்தார். ஐபிஎல் தொடரிலும் டெல்லி மாநில அணியில் இடம் பிடித்த பின்பும் கூட என்னுடைய காலணிகளுக்கு ஸ்பான்சர் கிடைக்காமல் தடுமாறினேன்”
இதையும் படிங்க: இரண்டாவது டெஸ்ட் டிராவானால் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு போக – என்ன செய்யவேண்டும்?
“இருப்பினும் கௌதம் பையா சொன்ன வார்த்தைகள் என்னுடன் இருந்தன. அவரும் விஜய் தகியாகவும் இன்னும் சில வருடங்களில் உனக்கு முதல் வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னது போல ஐபிஎல் தொடரில் அறிமுகமான பின் என்னுடைய காலணிகளுக்கு ஸ்பான்சர் கிடைத்தார்கள்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் மயங் யாதவ் பேக்-அப் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்பப்படுகிறது.