ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த கையோடு நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் என அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்திய அணி தகுதிபெற என்ன வழி? :
இந்த 10 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பெறும் வெற்றிகளின் அடிப்படையில் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுவது உறுதியாகும். அந்த வகையில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கான்பூர் நகரில் நடைபெற்று வரும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டதால் போட்டி டிராவில் முடிவடையவே அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ள வேளையில் இந்த போட்டி பரபரப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்த போட்டியில் ஒருவேளை டிராவில் முடிவடைந்தால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்வது சிக்கலாகிவிடும். இருப்பினும் இந்த போட்டி டிராவில் முடிவடையும் பட்சத்தில் இந்திய அணி அடுத்ததாக என்ன செய்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதை இங்கு காணலாம். அதன்படி இந்த போட்டி டிராவாகும் பட்சத்தில் அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய நிலை ஏற்படும்.
அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது 2 வெற்றி மற்றும் ஒரு டிரா கட்டாயம் தேவை. அப்படி இருந்தால் மட்டுமே இந்திய அணி முதல் இடத்தை தக்கவைத்து உலக டெஸ்ட் சாம்பியன் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும். எதிர்வரும் 8 டெஸ்ட் போட்டிகளில் மூன்று போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் கூட முதலிடத்தினை இழப்பதோடு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இயக்கும் அபாயம் ஏற்படும்.
இதையும் படிங்க : 5 நாளில் இதை மட்டும் பண்ணா இந்திய அணியின் வெற்றி உறுதி – கடைசி நாளில் செய்ய வேண்டியது என்ன?
ஏனெனில் இந்திய அணிக்கு அடுத்ததாக ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பிற்காக போட்டியினை அளித்து வருவதால் இந்திய அணிக்கு அடுத்து வரும் எட்டு போட்டிகளில் 5 வெற்றி அவசியம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.