5 நாளில் இதை மட்டும் பண்ணா இந்திய அணியின் வெற்றி உறுதி – கடைசி நாளில் செய்ய வேண்டியது என்ன?

IND-Team
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியின் போட்டியின் முதல் நாள் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட வேளையில் இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆகியவை மழை காரணமாக கைவிடப்பட்டதால் இந்த போட்டியில் டிராவில் முடிவடையவே அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்டது.

இந்தியா வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்? :

இந்நிலையில் நேற்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் அதிரடியான இன்னிங்ஸ் தற்போது போட்டியின் நிலையையே தலைகீழாக திருப்பியுள்ளது என்று கூறலாம். ஏனெனில் இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய வங்கதேச அணி 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

- Advertisement -

அதற்கடுத்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 34.4 ஓவர்களிலேயே 9 விக்கெட்டுகளுக்கு 285 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து அசத்தியது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் வங்கதேச அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 26 ரன்கள் எடுத்திருந்தது.

அதனைத்தொடர்ந்து போட்டியின் ஐந்தாம் நாளான இன்று இந்திய அணியின் வெற்றிக்கான ஒரு வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி என்ன செய்தால் வெற்றிபெறும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். அந்த வகையில் போட்டியின் ஐந்தாம் நாளான இன்று :

- Advertisement -

இந்திய அணி உணவு இடைவேளைக்கு பின்னரோ அல்லது தேநீர் இடைவேளைக்கு முன்னதாகவோ வங்கதேச அணியின் மீதமுள்ள 8 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். அப்படி இந்திய அணி விரைவாக வங்கதேச அணியின் எஞ்சிய விக்கெட்டுகளை வீழ்த்தினால் வங்கதேச அணி 100 முதல் 150 ரன்கள் வரை முன்னிலை பெற வாய்ப்பிருக்கிறது.

இதையும் படிங்க : 37 வயசாகிடுச்சேன்னே போகல.. இதனால தான் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றேன்.. கேப்டன் ரோஹித் விளக்கம்

அப்படி இருந்தால் கூட இந்திய அணிக்கு பேட்டிங் செய்ய நிச்சயம் 30-40 ஓவர்கள் கிடைக்கும். அப்படி கிடைக்கும் பட்சத்தில் அந்த இலக்கை இந்திய அணி அதிரடியாக சேசிங் செய்ய வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் காபா டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி ஓவருக்கு ஆறு ரன்கள் வீதம் அடித்து இறுதி கட்டத்தில் வெற்றி பெற்றுள்ளதால் நிச்சயம் இந்த போட்டியிலும் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று கூறலாம்.

Advertisement