37 வயசாகிடுச்சேன்னே போகல.. இதனால தான் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றேன்.. கேப்டன் ரோஹித் விளக்கம்

Rohit Sharma
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் சர்மா தலைமையில் வென்று சாதனை படைத்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியா அசத்தியது. அத்துடன் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தொடர்ச்சியான தோல்விகளையும் இந்தியா உடைத்தது.

அந்த வெற்றியுடன் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இருந்தனர். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மிகச் சிறப்பாக விளையாடிய அவர்கள் உலக அளவில் டாப் 2 ரன்கள் குவித்த வீரர்களாக சாதனை படைத்து இந்தியாவின் நிறைய வெற்றிகளை பங்காற்றியுள்ளனர். இருப்பினும் தற்போது 36 வயதை கடந்து விட்டதால் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு அவர்கள் ஓய்வு பெற்றனர்.

- Advertisement -

வயது பிரச்சனை கிடையாது:

இருப்பினும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் 37 வயதானாலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடவே விரும்பியதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ஆனால் இளம் வீரர்களுக்கு வழி விடுவதற்காகவும் தமது வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்காகவும் ஓய்வு பெற்றதாகவும் ரோஹித் கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்தில் பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இல்லை. என்னுடைய நேரத்தை கொண்டதற்காகவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றேன். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மகிழ்ச்சியுடன் 17 வருடங்கள் விளையாடிய நான் நன்றாக செயல்பட்டேன். அதன் உச்சமாக நீங்கள் உலகக் கோப்பையை வெல்லும் தருணமே நகர்வதற்கு சரியான நேரமாகும்”

- Advertisement -

இளம் வீரர்களுக்கு வழி:

“அது நகர்ந்து மற்ற விஷயங்களை பார்ப்பதற்கான நேரமாகும். இங்கே இந்தியாவுக்காக விளையாட நிறைய நல்ல வீரர்களும் உள்ளனர். எனவே நாம் செல்வதற்கு இதுவே சரியான நேரம் என்று உணர்ந்தேன். இப்போதும் என்னால் 3 வகையான கிரிக்கெட்டிலும் எளிதாக விளையாட முடியும். அதற்காகவே நீங்கள் எப்போதும் ஃபிட்டாக இருந்து பயிற்சிகளை எடுக்க வேண்டும் என்று நான் சொல்வேன்”

இதையும் படிங்க: இந்திய அணியில் தோனி, கோலி போன்ற எந்த கேப்டனும் செய்யாததை ரோஹித் செஞ்சுருக்காரு.. சபா கரீம் பாராட்டு

“அந்த அனைத்தையும் நான் கொண்டுள்ளதாக நம்புகிறேன். எனக்கு நிறைய தன்னம்பிக்கையும் இருக்கிறது. ஏனெனில் என்னுடைய மனதை என்னால் கட்டுப்படுத்த முடியும்” என்று கூறினார். இதை தொடர்ந்து 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை ரோகித் சர்மா வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த 2 தொடர்களில் அவர் இந்தியாவை வெல்ல வைப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Advertisement